காதலர் தினம்
கடவுளிடம் ஒன்று கேட்டேன்
எனக்கேற்ற ஒரு துனைவியை
அழகாய் அமைத்துக்கொடுத்தார்
கடவுளிடம் இரண்டு கேட்டேன்
கன்மனிப்போல் இரண்டு குழந்தைகள்
அவர் கருணையால் எனக்களித்தார்
கடவுளிடம் மூன்று கேட்டேன்
உன் தங்கையும் உனக்கு
இன்னோரு மகள்தானே என்றார்
கடவுளிடம் நான்கு கேட்டேன்
அந்த மூவருடன் நான் உன்
நிழலாய் இருக்கிறேனே என்றார்
கடவுளிடம் ஐந்து கேட்டேன்
அன்னையும் தந்தையும் அந்த
ஐவரில் இருவரல்லவா என்றார்
கடவுளிடம் அதிகம் கேட்டேன்
முகநூலில் மெய்நிகர் என்றாலும்
மெய்யான நட்பு அதிகம் என்றார்
கடவுளிடம் அளவில்லாமல் கேட்டேன்
அளவுக்கடந்து உன்னை நேசிக்கும்
உறவினர் உடனிருக்கிறார்களே என்றார்
கடவுளிடம் அனைத்தையும் கேட்டேன்
அனைவரிடமும் அன்புக்காட்டு இந்த
உலகத்தின் அனைத்தும் உனக்கானது என்றார்
அன்பே பிரதானம் Happy Valentine's day