மகளிர் தினம்
அடிமையாய் வீட்டில் சிறைவைத்திருந்த அந்த
அடக்குமுறை என்றோ அழிந்து போனது
அடுப்பாங்கரையை உன் அலுவலகமாய் வைத்திருந்த
ஆணாதிக்கத்தின் திமிர் என்றோ அடங்கிப்போனது
விண்ணில் பறக்கும் பெண்கள் சிலர்
விண்வெளியை அடையும் பெண்கள் சிலர்
இருந்தும் தனியாய் தன் தெருவை சுற்றிவர
தயக்கம் காட்டும் பெண்கள் பலர்
விட்டில் பூச்சிக்கு விளக்கின் ஒளி போதும்
விடிய காத்திருக்க அதற்கு அவசியமில்லை
தட்டிக்கொடுக்க தகப்பனோ அல்லது
விட்டுக்கொடுக்கும் கனவனோ போதும்
கெட்டுக்கிடக்கும் இச்சமுகம் மாரும்
என்று காத்திருக்க அவசியமில்லை
அரக்கர்களின் நிழலில் அரவணைப்பை தேடாதே
எதிர்ப்புகள் வந்தால் எதிர்த்துநிற்க்க தயங்காதே
எதிர்மோதி எதிரிகளை தரையிலே தள்ளிப்போடு
தடைகளை தகர்த்து தன்னம்பிக்கையோடு நடைப்போடு
அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்