காதல் கீதம்

அந்த இனிய காதல் ராகம்
அந்த இனிய அதி காலை
வேளையில் என் காதில் வந்து
ஒலித்தது , ராகம் வந்த திசையை
நோக்கி நடந்தன என் கால்கள்
ஒரு சிறு கோயில் வாயிலை
வந்தடைந்தேன் , இப்போது
அந்த காதல் கீதம் என் இதயத்தையே
ஊடுருவி எனக்குள் ஓர் புத்துணர்ச்சி
தந்திட , கோயிலுக்குள் நுழைந்தேன்
அங்கு நான் அவளைக் கண்டேன்
தன்னையும் மறந்து இவ்வுலகையே மறந்து
தேவ கானம் இசைத்துக்கொண்டிருந்தாள்
எதிரே திறந்திருந்த கர்பகிரகத்தில்
புல்லாங்குழல் ஏந்திய கண்ணனின்
அற்புத மூலவர் சிலை , புன்னகைத்தான்
கண்ணன் , இந்த கன்னியவள் பாடிய கீதம்
கேட்டானோ மாய கண்ணன் அப்படிதான்
நான் நினைத்தேன் ஏனெனில்
நான் வந்து அவளருகில் நின்று அவள் பாடிய
கண்ணன் மேல் அவள் கொண்ட காதல்
கீதத்தைக் கேட்டு மகிழ்ந்தும் கூட
தெரியாது பாடிக்கொண்டிருந்தாள் அவள்
கண்ணனுக்கே தன்னை உகந்தளித்தாளோ
அவள் அன்று ஆண்டாளும் மீராவும் போல
இதுதான் நான்கேட்ட காதல் கீதம்
இறைவனைத்தேடி அலையும் உயிரின்
காதல் கீதம் இறைவனுக்குகந்த கீதம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Mar-19, 8:51 am)
Tanglish : kaadhal keetham
பார்வை : 80

மேலே