பெண்னே
பெண்னே....
அடிமையாய் கிடந்தோம் அடுப்படியில் அனலாய் பறந்தோம் விண்வெளியில்,,, காலத்தின் மாற்றம்
உன்னையும் என்னையும் மாற்றிவிட மானிடனின் பார்வை மட்டும்
மாறவில்லையே
பெண்னே
வீணையாய் இருந்தது போதும்
பெண்னே உன்னை மீட்ட ...
வினைகளையும் அறுப்போம்
வில் என கிளம்பிடு....
உன்னை பெற்றவளும்
தாய் தான்
அவனை வளர்ந்தவளும்
தாய் தான் ...
பெண்ணுக்கு பெண்னே வினையானள்...
நிதழ்லத்திற்கும் இறந்தகாலத்திற்கும் இடையில் ஊஞ்சலாடும் வினைத்தொகையாய்
நீ ஆனாய்
பெண்னே....
காட்டிப்பொருளாய்
காலம் உன்னை மாற்றும் முன் ....
வெற்றுப் பொருளாய் மாற்றி விடு
தாய், சேய் ஆறிய
காயவர்களை
உணர்வுகளுக்கும் உயிர்க்கும்
இடையில் உணர்ச்சிகளை சேர்க்கும் கொடுரர்கள் விரிக்கும்
வலையில் பிணமாய் வாழ்வதை விட
நீ புரட்சிப்பெண்ணாய்
வாழ்ந்து விடு
காலத்தாயும் வென்று விடு...
பண்பாட்டிலும் காலச்சாரத்திலும்
மேன்பாட்டு இருந்தோம் தமிழராய்
உலகறிய செய்தோம்...
களர் நிலத்தில் களைகளை விதைத்தது யாரோ???
பெண்ணே
களர் நிலத்தை பண்பாடுத்திடு
களைகளை வேரோடு அறுத்திடு....
பொங்கி ஏழும்
உன் உணர்வில் நமது தோழிகளின் அழுகுரல் அடக்கவில்லையே....
கண்ணீர் சிந்தும் அவள்
கண்ணில் புன்னகை மலர்ந்திடுமா???
முட்களின் நடுவில் ரோஜாவாய்
வாழ்ந்தது போதும் பெண்னே...
அல்லியாய் மலர்ந்திடுவோம்
நாம்...
ஆகாயம் வரை விரிந்திட
பெண்ணே!