கூடு பாய்கிறேன்
இப்படி ஒரு நாளும் கண்டதில்லை
என் தந்தையை
பெயர்த்தியின் பின்னால் சிறுபிள்ளையாய்
ஓடி விளையாடுகிறார்
சுவரோரம் சாய்ந்து கொண்டே
கூடுவிட்டு கூடு பாய்கிறேன் மனதால்
என் மகளின் உடலுக்குள்
இப்படி ஒரு நாளும் கண்டதில்லை
என் தந்தையை
பெயர்த்தியின் பின்னால் சிறுபிள்ளையாய்
ஓடி விளையாடுகிறார்
சுவரோரம் சாய்ந்து கொண்டே
கூடுவிட்டு கூடு பாய்கிறேன் மனதால்
என் மகளின் உடலுக்குள்