என் நிலைகண்டு
தலைவாரி பொட்டுவைத்து
பூச்சூடி காத்திருப்பேன்
கதவோரத்தில் நின்று
அவன் வருகையை
எதிர் பார்த்திருப்பேன்
யாரும் பார்க்காத
நேரத்தில் பார்த்திருப்பேன்
எனக்கானவன் இவனோ
எவனோ என்று
காத்திருப்பேன் முதன்
முதலில் வந்தவனை
இவன்தான் இவன்தான்
எனகூவிற்று மனம்
பார்த்துப் போனவன்
திரும்பிப்பாராது போனான்
ஆள்மட்டும் மாறி மாறி
வர
பதில்மட்டும் வராமலேப்
போக
பழக்கமாகியதால் நான்
சமாதானமாகி விட
ஒவ்வொரு முறையும்
நான் சூடும்
பூ மட்டும் வாடிவிடுகின்றது
என் நிலைகண்டு..,