என் அன்பே

தினமும் பேசும் வார்த்தைகள் வேணாம் ,
உன்னுள் தொலையும் மௌனம் போதும் ...

நினைவில் பார்க்கும் பார்வை வேணாம் ,
நித்தமும் உன் நினைவுகள் போதும் ...

கைக்கோர்த்து சாலையில் நடக்கும் பயணம் வேணாம் ,
கனவில் வாழும் நம் காதல் போதும் ...

தினமும் உன் கையால் பூக்கள் வேணாம் ,
உன் அன்பில் பூக்கும் புன்னகை போதும் ...

எட்டி பிடிக்கும் தொலைவில் நீ வேணாம் ,
எட்டாத உயரத்தில் நீ வளர்ந்தால் போதும் ...

உலகம் பேசும் ஆயிரம் மொழிகள் வேணாம் ,
நம் உள்ளம் பேசும் காதல் மொழி போதும் ....

எங்கும் வீசும் காற்று உன்னை சேர்வது போல்
என் அன்பும் உன்னையே சுற்றும் ...

நீயில்ல வாழ்க்கை கடினமே
ஆனால் ,உன் நினைவுகள் என்றும்
என் பொக்கிஷமே ...

நான் உன்னை மறப்பேன்
என ஒருபொழுதும் நினைக்ககா தே ,
உன்னுள்தொலைந்தவள் நான்
ஆனால் உனக்காக தொலைந்தவள் என
மறந்துவிடாதே என் அன்பே

எழுதியவர் : Deepikasukkiriappan (16-Mar-19, 1:59 pm)
Tanglish : en annpae
பார்வை : 659

மேலே