கல்லறை வாசகம்
தோல்வியுற்று கடந்து வந்த காதல்
வாழ்வில், தொலைதூரம் சென்றும்
தொலையாமல் பயணிக்கிறது
எப்படியோ , தினமும் நினைவில்
வந்து சென்று விடுகிறது
"காலமெல்லாம் கைவிடமாட்டேன்" என்று சொன்னது
இன்று சிரிப்புமூட்டுகிறது
உன்னை ரசித்து கவிதை எழுதவே பிறந்தவன் போல
உனக்கு மட்டும் கவிஞனானேன்
இப்பொது தெரிகிறது நீ அவ்வளவு அழகில்லை என்று
நீ என்னை கைவிட்டபோது,
நெஞ்சம் வலித்தது
இப்பொது விளங்குகிறது கழட்டிவிடுவது
உனக்கு சாதாரணம் என்று
நீ கட்டியணைத்த சுகம் இன்னும் அழியவில்லை
அது காமம் இல்லை காதலில் ஓர் அங்கம் என்றாய்
உன்னுடன் வாழ விரும்பினேன், கைவிட்டுவிட்டாய்
மீண்டும் நீ என் அருகில் வந்தாலும்
பார்க்கக்கூடமுடியாது, ஏனென்றால்
இது என் கல்லறை வாசகம்