கண்ணீருடன் பயிர்
நீ இன்றி நான் இல்லை
நீயோ நீரின்றி இல்லை
நீரோ இங்கில்லை
நீயோ எங்கு சென்றாய்.....
நீர் இறக்க,
நீ விதைக்க,
நான் பிறந்தேன்
உன் கண்ணீர் துடைக்க.....
நீயோ உற்றார் நீர் துடைக்க,
உன் பசி மறந்தாய்......
நேரம் பார்க கூட
வானம் பார்காத
நீ ---- இன்று
வானம் பார்த்து வீழ்ந்துவிட்டாய்.......
கலப்பை ஏந்தும் காளையும்
கண்ணீர் விடும்
உன் முகம் பார்த்து................
.......விவசாய மக்களுக்கு சமர்பணம்........