தனியார் கூடங்கள் விற்குது

படிப்பு இங்கு கடையில் பெற்ற
பொருளாய் மாறிப் போனதே
படித்த மாந்தர் எழுதும் எழுத்து
தவறின் குவியலாய் ஆனதே
சுவைத்து படித்த சிலரின் கல்வி
மேலை நாட்டுக்கு போனது
அரசு கல்விக் கூடமெல்லாம்
அழற்சி கண்டு தூங்குது
தம்பிடிக்கும் தரமில்லாமல் கல்வியை
தனியார் கூடங்கள் விற்குது
தமக்கான பெரும் வாழ்வை
தரமான கல்வியே கொடுத்திடும்
தரணி முழுதும் கல்விக் கூடத்தை
தார்மீகமாக அரசே நடத்தணும்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (28-Mar-19, 5:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1445

மேலே