மரணம் போதித்த வாழ்க்கை

வாழ வேண்டாதார் வாழுதலும்,
வாழ வேண்டியவர் சாதலும்
இயல்பாகிய உலகில் அரக்கன் நான் வாழ்கிறேன்,
பச்சிளங்குழந்தை அவள் இறந்தாள்,
விந்தையாய் நிகழும் பிறப்பும், இறப்பும் ஆயிரம் பாடங்களைக் கற்றுக் கொடுக்க, அரக்கனில் இருந்து மீண்டுவரும் என்னை மீண்டும் மீண்டும் சில வினாடிகளாவது தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறான் அந்த அரக்கன்.

மறக்காத இறப்பு,
நல்ல கனிந்த அன்பின் இழப்பு,
அவ்விடம் என் ஞானத்தின் பிறப்பு,
எல்லாம் தந்த ஆதிமூலம் உங்களிடமிருந்து என்னை தனிமைப்படுத்தி வைக்க விரும்புகிறான்,
ஆதலால் நான் விலகி நிற்கிறேன்.
தனியாக நின்றாலும் என்னில் பயமில்லை.

மரணத்தை சந்திக்கத் தயாராக நான் நிற்க,
மரணம் என்னை நெருங்காது ஓடுகிறது.
சாக நினைக்கும் நான் வாழ்கிறேன்.
பணம், பதவி, செல்வம், ஆயிரம் சொந்தங்கள் என எல்லாம் அமையப் பெற்று இன்னும் வாழ விரும்புகிறவர்கள் சாகிறார்கள்,
அதனினும் கொடுமை பிஞ்சுக் குழந்தைகள் நோயின் பிடியில் இறத்தல்.
மருத்துவமனை சென்றால் உயிர் பிழைக்கலாமோ?
எவ்விடம் சென்றாலும் செல்வத்தைக் கொட்டி வைத்தியம் பார்த்தாலும் பிழைக்காது.
நல்ல எண்ணத்தோடு மன தைரியங்கூட வாழ்ந்தால் நோய் வருமுன் காத்து வாழ்வோம் இப்பெருவாழ்வை.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (31-Mar-19, 9:44 am)
பார்வை : 9130

மேலே