மரம் வளர்த்தேன்

என் மனைதனில்,
மகள் வளர்த்தேன்
மகளிடம் பாசம் வளர்த்தேன், அவளோ இன்னொருவர்
மனையாள் ஆனாள்
மகன் வளர்த்தேன்
மகனிடம் பாசம் வளர்த்தேன், அவனோ இன்னோருத்தி
மணவாளன் ஆனான்!
என் தோட்டந்தனில்,
மரம் வளர்த்தேன், நினை
மரமாய் மட்டுமே வளர்த்தேன்,.நீ
மணக்கும் மலர் தந்தாய், காய், கனி தந்தாய்,
மயக்கும் நற்காற்று தந்து, நான்
மனம் சோர்ந்து அமர்கையில்,
மடியோரம் இடமும் தந்து,
மதியையும், தேகத்தையும்
மகிழ செய்தாய், என்
மனையின் பின்புறம்
மரமாய் இருப்பினும், இன்று என்
மன தனிமையை போக்கும்
மாமருந்தாக நிற்பது நீயன்றோ என் தாயே!

இவண்
சங்கீதாதாமோதரன்

எழுதியவர் : sangeethadamotharan (2-Apr-19, 11:11 am)
சேர்த்தது : Sangeethadamodharan
Tanglish : maram Valarthen
பார்வை : 48

மேலே