கனியது காதல் இனியது

என்னிலும் எதிரி உண்டோ நெல்லிலும் பதறு உண்டோ எனும் நோக்கம் கொண்ட நன்கு வசதிஉடைய எதற்கும் அஞ்சா நெஞ்சம், முரடன், முரணான கருத்தை மனதில் கொண்ட பரம்பரை சொத்தில் காலத்தை கழிக்கும் ஜீவன், நகைக்கடை அவன் கழுத்தை அலங்கரித்து இருக்கும் ஒரு பிராணியின் மகன் கஜேந்திரன் டிகிரி அரியர்ஸில் முடித்தவன்

ஆரத்தி ஓரளவுக்கு வசதி உள்ளவள், பெரியவர்கள், வயது முதிந்தவர்கள் நட்பு கொண்டவள், அடக்கமானவள் வீன் சோலி இல்லாதவள், இந்த சினிமா டீவி சீரியல் இதில் எல்லாம் அவளுக்கு கொஞ்சமும் நாட்டம் கிடையாது, ஆனாலும்

தாடி மீசை இல்லையே ஒழிய ஆம்பளைங்க மாதிரி பயங்கர கோவக்காரி, அவள் வயதில் பெரியவர்களோ சிறியவர்களோ தப்புன்னு தெரிந்தால் போதும் சடாலென கையை ஓங்கி டப்பு டிப்பின்னு போட்டுவிடுவாள் கண்ணம் கதைபடிக்கும் ஆனாலும் யாரும் கீச்ச மாச்சுன்னு எதுவும் பேசாமல் போய்விடுவர் காரணம் சட்டம் பற்றி அவளுக்கு தெரியும் என்பதால் நம்புவதால் அதே சமயத்தில் போலீசு கீலீசுன்னு மாட்டி விட்டு பொழைக்கிற பொழப்பை விட்டு அவங்களுக்கு பின்னால் யார் சுத்துவது என்ற பயம், கருணை உள்ளக்காரி, உயிரையும் கேட்டால்கூட கொடுத்து விடுவாள், துணிச்சல்காரி தற்பெருமை கிடையாது,

ஊருபட்ட அப்பல்களை அப்பிக்கிறவ கிடையாது, அப்படி அப்பி இருக்கிற பொண்ணுங்கள கூப்பிட்டு கடவுள் கொடுத்த அழகு முகத்தை இப்படி காசை விரயம் பண்ணி வீணா செலவழிக்கிறதால என்ன பிரயோசம் நீ செத்து மேல போனால் உன்னை படைச்ச கடவுளுக்கே அடையாளம் தெரியாமல் இவளை நான் படைக்கவில்லை என்று நரகத்தில் தூக்கி கிடாவிடுவான் தெரியுமா காசு கையில் கிடைக்கும் போது அதை சேமித்து வைத்து அட ஒரு நகையோ நட்டோ எடுத்து போடலாம் இல்லையா தினம் பூசுறே தினம் கழுவுறே ரிசல்ட் என்ன ஒன்னும் இல்லை

சிவப்பா இருக்கிறவங்க பூசினாலும் பூசாம போனாலும் அவங்க செவப்பாத்தான் இருப்பாங்க அதே சமயத்தில் கருப்பா இருக்கிறவங்க பூசினாலும் பூசாம போனாலும் அவங்க கருப்பா தான் இருப்பாங்க சிவப்பாகிட மாட்டாங்க நல்லா ஞாபகத்தில் இருக்கட்டும்

கடைசியில் நம்ம முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது நமக்கே பார்க்க சகிக்காது கண்ணாடி அதற்கே சகிக்க முடியாமல் வெடிச்சி சிதறி பொடிப் பொடியாக கொட்டிடும் என்பாள்

ஆரத்தி சொல்வதில் ஞாயம் இருப்பதை உணர்ந்து அப்பல் அலம்பலை ஒருவரைப் பார்த்து ஒருவர் என ஒட்டு மொத்தமாக கை விட்டப்பின் அவர்கள் காதிலும் மூக்கிலும் கழுத்திலும் கைகளிலும் கைவிரல்களிலும் அவ்வளவு ஏன் கால் கொலுசையே வெள்ளிக்கு பதிலாக தங்கத்திலேயே அணிவதை காண சந்தோஷமாக இருந்தது

ஆரத்தி பொண்ணுக்காக ஐம்பது சவரன் நகைகள் ரெடி, ஆனாலும் அதை மாட்டிக்கொண்டு சிலாக்கியம் அடித்து கொள்வதில்லை, அவளின் அம்மையார் நகைகளை போடேண்டி வச்சிக்கிட்டே ஏன் இப்படி கறுப்பு காட்டுறே என்று வற்புறுத்துவார்கள், அதற்கு அவளின் பதில்

"" அம்மா இருக்கிறது என்று நான் போட்டுக்கிட்டு ஆட்டி ஆட்டி காட்டினா, இல்லாதவங்க கண் பட்டால், நமக்கு இல்லையேன்னு அவுங்க மனசு ஏங்கி சங்கடப் படும்மா அதைத்தான் விடயம் தெரியாதவர்கள் கண்ணுபட்டுவிட்டது என்று உப்பு மிளகாய் படிகாரம் அது விலையாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் திருஷ்டி சுத்தி போடுகிறார்கள் என்பாள்,

யாராவது புதுபடம் இன்னைக்கு ரிலீஸ் வாடி டிக்கெட்டு நான் எடுக்கிறேன் என்று அழைத்தாலும் ,

""" இதோ பாருங்க நம்ம கதையே தண்ணீரில் தாமரை இலைபோல மிதக்கிறது இதுல அடுத்த வங்க கதையை நாம பார்க்கனுமா இருக்கிற துக்கம் ஒண்டியா இருகேன்னு துணைக்கு ஒரு துக்கத்தை சேத்துக்கிறது போலாகாதா என்ற கருத்தை மனதில் கொண்டு ஒதுங்கி விடுவாள்

பின் என்ன நினைத்தாளோ படம் பார்க்க போக இருந்தவர்களை அழைத்து கேட்டாள் சினிமாவுக்குன்னு போயி வீடு திரும்பும்வரை தோராயமாக எவ்வளவு செலவாகும் என்று

ஒருத்தி சொன்னாள் என்ன இங்கேயிருந்து தியேட்டருக்கு போக ஆட்டோவுக்கு ஐந்து வர ஐந்து டிக்கெட்டு இருநூறு அதுக்கு மேலேயும் ஆகலாம் இடைவேளையில் அதை இதை வாங்கி தின்ன நூறோ இருநூறோ மொத்தத்தில ஐநூறு அவட் என்றாள்

வாரத்தில் ஒருநாளோ இல்லை மாசத்தில் ஒருநாளோ ஐநூறு ஐநூறு செலவாவுது அதை வங்கியில் இல்லை போஸ்ட் ஆப்பிசில் கணக்கை திறந்து போட்டுக்கிட்டு வந்தா எப்படியிருக்கும்

என்ன கணிசமாக ஒரு அமௌண்டு கெடைக்கும்

ம்….கெடைக்குமில்ல…அது அப்படியே யாருக்கும் தெரியாத மாதிரி இருக்கட்டுமே நமக்கு கல்யாணம் ஆகலாம் கெடைச்ச புருஷன் சரியில்லாதவனாக இருக்கலாம் ஏதாவது ஒரு காரணத்துக்காக பிரிய நேரிடலாம், அல்லது வரதட்சணை பிராப்ளமாக இருக்கலாம் அடிச்சி தொரத்தப்படலாம் அந்த சமயத்தில் நாம தனியாக இருக்க வேண்டிய நிலமை உருவானால் பெத்தவங்களை தொந்தரவு பண்ணாமல் நம்ம வண்டியை நாமே ஓட்டிக்கலாம் இல்லையா

பன்னிரண்டாவது வரை முடித்தவள் அதுக்கு மேல் வக்கீலுக்கு படிக்க ஆசையாக இருந்தாள், குடும்பத்தினர் ஒன்று கூடி காலம் கெட்டுக்கிடப்பதை எண்ணி மேல் படிப்புக்கு சீல் ஊத்தி முத்திரை குத்தி விட்டார்கள்,

அவளுடைய ஹாபி லைப்ரரி, ஊருபட்ட சட்டம் தெரிந்து கொள்ளுங்கள் என்ற புத்தகங்கள் தான், படிப்பை நிறுத்தி நாட்டுக்கு ஒரு லாயரை இழந்து விட்டார்களோ, சிறு வருத்தமாக தான் இருக்கும்.

நாலு ஐந்து இடத்தில் பெண் பார்க்க வந்தார்கள் வந்தவர் எல்லாரும் பெரிய பெரிய அரசாங்க வேலையில் இருப்பவர்கள் கைநிறைய சம்பளம், தானே வரும் வரனை வேணாமுன்னு தட்டி கழிக்க கூடாது சரின்னு சொல்லும்படி கேட்டால்,

""" அப்பா உங்க பொண்ணை வசதியாக வாழவைக்க நீங்க நினைப்பதில் தப்பு இல்லை அங்கே எல்லாமும் இருக்கும் ஆனா நிம்மதி இருக்காதுப்பா, நிம்மதி இல்லேன்னா மனசில சஞ்சலம் உண்டாவும் நரம்பு தளர்ச்சி கொடுக்கும் சீக்கிரத்தில் கல்லறையில் படுக்க வச்சிடும்பா, அந்த சஞ்சலம் ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்கள் தயவை நாடி வர உங்களுக்கு கண் ஜலம் தான் ஊற்றெடுக்கும் இது தேவையா

எனக்கு ஆண்டவன் கொடுத்த ஆயிசு பூராவும் ஒரு நோய் நொடி இல்லாமல் வசதியாகவோ இல்லை ஏழ்மையாகவோ அது எதுவாக இருந்தாலும்கூட வாழ்ந்து முடிக்கனும்பா அதுதான் என்னோட ஆசை, நானாக எப்போது சொல்றேனோ யாரை காட்டுறேனோ அதுவரைக்கும் யார் வந்து பொண்ணு கேட்டாலும் ஊங்கொட்டிட கூடாது நான் சொல்வேன் அன்னைக்கு உங்க கடமையை முடிங்கப்பா ""

எங்கே யாவது நம்ம மகள் அப்படி இப்படி என்று ஆகிவிடலாம் என்று நீங்கள் பயந்து கொண்டு இருப்பது ரொம்பவும் தெளிவாக தெரிகிறது அப்பா அப்படி நீங்க நெனைச்சா அதை தப்புன்னு நான் சொல்லமாட்டேன் ஊர்ல உலகத்தில நடக்கிறதை வைத்து நீங்கள் அச்சம் கொள்கிறீர்கள் ஆனால் நான் உங்க பொண்ணுப்பா

என் மேல ஆசைப்பட்டு அலைவோருக்குப் பின்னால் என்னால் திரும்பி கூட பார்க்கும் எண்ணம் தோன்றவே தோன்றாது எனக்கு மனசுக்கு பிடித்தவர் பின்னால் நான் போவதையே விரும்புகிறேன் அது யார் என்பதை பிறகு நேரம் காலம் அமையும் போது சொல்லுவேன் அதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் செய்து வையுங்கள் இல்லை என்றால் விடுங்கள் என்று கூறி வந்தாள்

அவளுக்கு அவளோட கூட பன்னிரண்டாவது வரை படிச்ச பால்ய நண்பன் அரவிந்தன் மேல் ஒரு கண்ணாக இருந்தாள், கட்டினா அரவிந்தனைத்தான் கட்டனும் இல்லேன்னா கன்னியா ஸ்திரியாகி மடத்தில் சேர்ந்து அன்னை தெரசா மாதிரி ஏழை பாழைக்கு சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற மன பிடிவாதத்தில் இருந்தாள், ஆனால் அது அரவிந்தனுக்கு தெரியாமல் ஒன்சைடாக இருந்தது, ஆரத்தியும் வெளி படுத்தவில்லை,

அவனுக்கு கல்யாணம் என்று ஒன்னு ஏற்பாடு ஆனால் அது என் கூட கண்டிப்பாக இருக்காது என்பது நிச்சயமாக அவளுக்கு தெரியும்,

ஏன்னா இந்த பாழாப்போன சாதி சமாதி கட்டிவிடுமே, நான் மேல் சாதின்னு சொல்றாங்க, டிரசிங் அறைக்குள் போய் கதவு சன்னல் எல்லாத்தையும் இறுக்கி மூடிவிட்டு நிலைக் கண்ணாடி முன்னாடி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வளைந்து வளைந்து பார்த்தால் மாறுபாடு தெரியவருமா என்று கூட யோசிப்பாள் மேல் சாதிக்கும் கீழ்சாதிக்கும் ஏதாவது அறிகுறி இருக்கா என்று கண்டு பிடிக்க,

சான்றிதழில் நான் இந்த சாதியின்னு சொன்னாங்க குறிச்சிக்கிட்டாங்க அவ்வளவு தான்

உடம்பில் என்ன நோவு இருக்கிறது என்று வைதியர் சோதித்து கண்டு பிடித்து இன்னின்ன நோவு என்று சொல்வது போல்

யாரும் சாதியை சோதித்து சொன்னவர் இன்றுவரை ஒருவரும் கிடையாது, இனிமேலாவது வருவாங்களோ மாட்டாங்களோ தெரியாது அப்படியும் சொல்லக் கூடியதாக இல்லை

வாயால் சொல்வதை பதிவு பண்ணுகிறார்கள் ஆனால் அதுக்கு ஆதாரம் எதுவும் கிடையாது தன் தேவைக்கு தாங்களே, உருவாக்கிக் கொள்கிறார்கள்,

ஒருவன் மேல் சாதிக்காரனாக இருப்பான்

வேலையில்லா திண்டாட்டம் படிக்க வாச்சாத்தி இன்னும் வேலையை பிடிக்காமல் இருந்தால் அதுக்காக வாங்கின கடனையெல்லாம் எப்படி அடைப்பது என்பது பெற்றோரின் முனகல் எந்த விதத்திலும் வேலையை பிடிக்க குறுக்கு வழிய அவன் கீழ் சாதி என்று சான்றிதழில் மாற்றி கொடுத்து அந்த வேலையை பிடித்தவனாக இருக்கும்

பாவம் அவனுக்கு தலையில் என்னென்ன சுமைகளோ அதனை தாக்குபிடிக்க முடியாமல் குறுக்கு வழியை கையாண்டு அந்த வேலையை பெற்றிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது காரணம் வேலையில்லா திண்டாட்டம் என்று அவளுக்கு அவளே பேசிக்கொள்வாள்

ஊரார் கூற்றுப்படி அரவிந்தன் தாழ்ந்த சாதி என்கிறாங்க, அதுக்கும் எந்த ஆதாரமும் கிடையாது, எதை வச்சி நிர்ணயிக்கிறாங்க என்பது கேள்விக் குறியாக இருக்கு,

இதற்கு அரசாங்கமும் அங்கீகாரம் கொடுத்து, வகுப்பு வாரியாக பிரித்து சிலவற்றிற்கு சலுகையும் செய்கிறது

டாக்டருக்கு படிக்கிறவரை சாதி சலுகைகள் பேரில் தேர்ச்சி அடைய வச்சா அவர் வைத்தியம் பார்க்கமாட்டார், வேணுமின்னா இரண்டு பேரை சுடுகாட்டுக்கு வழியனுப்பி வைக்கலாம் சாதி என்பது என்ன கருப்பா சிவப்பா எனக்கு சத்தியமாக தெரியாது என்பாள்

அதிலேயும் அரவிந்தன் ஏழ்மை யானவன், பேக்ரவுண்டு எதுவுமே கிடையாது, அவனோட படிப்பை நம்பி இருக்கும் அவனோட குடும்பம், கடன் பட்டு படிக்க வைக்கிறார்கள் ஆண்டவன் அருளிய ஆசீர்வாதம் அரவிந்தன் அரியர்ஸ் இல்லாமல் டிகிரி முடித்துவிட்டான் நல்ல பர்சண்டேஜ் கிடைக்க பெற்றவன் இவ்வளவு தெரிந்திருந்தும் அவனை ஏன் விரும்புகிறேன் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை ஆனாலும் அவனைத் தவிற வேறு எவனுக்கும் கழுத்தை நீட்டவும் மாட்டேன் என்று இருக்கிறாள் ஆரத்தி

மானம் மரியாதை கௌரவம் என்கிற கொடிய அசுரர்கள் கையில் மாட்டினவங்க தைரியசாலியா இருக்க முடியாது,

அந்த மூனு அசுரர்களுக்கு அடிமையாக இருந்தால்தான் நாம நம்ம காலத்தை ஓட்ட முடியும், அதனால கொஞ்சம் பயந்த சுபாவம் அதோடு சாந்த குணம் அரவிந்தனுக்கு

தமிழ் நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள் கண்டு படித்த நிறைய பேர் விண்ணப் பித்துள்ளார்கள்

அதில் உயர் சாதிக்கார கஜேந்திரனும் தாழ்ந்த சாதிக்கார அரவிந்தனும் தேர்வு எழுதியதால் பாசானவர்களில் இவர்கள் இருவர் பெயரும் இருந்தது

அவளுக்குள் ஒரு இனம் கூறவியலா ஆனந்தம் இதுவரைக்கும் பட்ட கஷ்டத்தில் முற்றுப்புள்ளி விழப்போகும் நாளை எண்ணி அவன் குடும்பத்தையே தூக்கி நிறுத்தப்போகும் நாள் என்று

ஒருநாளை நியமித்து நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட்டது இருவரும் போனார்கள் அதுவரை நம்ம ஊரிலேயே இன்னொருவனும் பட்டதாரி இருந்திருக்கிறான் என்பது அன்றுதான் தெரியவந்தது

நேர்காணல் முடிந்து ஒரு வாரத்தில் வேலையில் சேர அரவிந்தனுக்கு மட்டும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பது கஜேந்திரனுக்கு தெரியவந்தது வருந்தினான்

அதே சமயத்தில் இருக்கபட்டவனையும், இல்லாத பட்டவனையும் இறைவன் கவணிக்கிறான் யாருக்கு கொடுக்க வேணுமோ அவனுக்குத் தான் கொடுத்து இருக்கிறான் இதில் நான் வருந்துவதற்கு என்ன இருக்கிறது என்று மனதை தேற்றிக் கொண்டான்,

கஜேந்திரனின் அப்பாவின் கவணத்திற்கு விடயம் போனது ,லேண்டு லைன் போனை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு கவுன்சிலர் முதல் கொண்டு எம்.பி. வரை சிலாவி பார்த்தார் ஒரு பருப்பும் வேகவில்லை

அரவிந்தனுக்கு சாதி அடிப்படையில் வந்து சாதி என்று தமிழ் நாடு அரசு அவனை வரவேற்று அந்த வேலையை கொடுத்துள்ளது

எடுத்த உடனே முப்பதாயிரம் சம்பளம் என்பது கஜேந்திரனின் அப்பாவுக்கு தெரிய வந்தது , எரிய கூடாத இடமமெல்லாம் எரியவே அதைப்பற்றியெல்லாம் அவரால் ஜீரணிக்கும் பொருமை இல்லை என்பதே உண்மை அது அவருக்கு கௌரவ குறைச்சலாக எண்ணினார்

ஆரத்திக்கு அவளின் சிநேகிதி போனில்
சொல்கிறாள் " நான் கடைவீதி போகும்போது அரவிந்தனைப் பத்தி கஜேந்திரன் வீட்டில் பேச்சு அடிப்பட்டது என் காதில் விழுந்தது என்னவாக இருக்கும் அரவிந்தனைப்பத்தி இவங்க ஏன் பேசறாங்கன்னு சந்தேகப்பட்டு அது நம்ம கூட படிச்சவன் பெயர் தானா இல்லை அந்த பெயரில் இன்னும் வேறு யாரேனும் இருக்கிறார்களா எதுக்கும் கிட்ட போய் கேட்போமே என்று மறைந்து நின்று கேட்டேன்டி, கஜேந்திரனின் அப்பா அரவிந்தனை வேலைக்கு போகவிடாமல் அவன் வீட்டு வாசலிலேயே கையை காலை ஒடித்து மாயமாயிடுங்க என்று அடியாள் டவுனில் இருந்து வரவழைச்சி முன் பணமும் கொடுத்ததை என் கண்ணால் பார்த்தேன் கொடுத்த வேலையை கச்சிதமாக செஞ்சிட்ட பிறகு முழு பணமும் கொடுப்பதாக பேசினாங்கடி அவுங்க வீட்டுக்கு தெரிய வச்சி ஜாக்கிறதையா நடந்து கொள்ள ஏற்பாடு எப்படியாவது பண்ணுடி இல்லேன்னா பொணமாயிடுவான்டி என்றாள் சினேகிதி ""

பணம் இருக்கிற வனுக்கும், சனம் இருக்கிறவனுக்கும் ஈனம் மானம், நீதி நேர்மை, தயவு தாட்சண்யம் எதுவுமே கிடையாது அவுங்க யார் வாழ்க்கையில் வேணுமின்னாலும் புகுந்து விளையாடுவதே விளையாட்டாப்போச்சி சரி இப்போதே அரவிந்தன் வீட்டுக்கு போறேன் "" அங்கே போய் என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியாமல் தலையை போட்டு பிய்த்துக் கொண்டாள் ஆரத்தி

ஒரு யோசனை, ஆரத்தி யோட இன்னும் ஒரு சிநேகிதி அரவிந்தன் வீட்டுக்கு எதிரில் தான் குடியிருக்கிறாள் அவளுக்கு போன் போட்டு வீட்டுக்கு அழைத்து விஷயத்தை சொன்னாள்

""அரவிந்தன் இருட்டோட போனால் தான் பஸ் புடிச்சி அப்பீஸ் போய் சரியான நேரத்தில் சேர முடியும் எனவே அவன் இருட்டோட கெளம்புவான் நீ என்ன பண்றே உன்னோட மொபைல் எடுத்து அரவிந்தன் வாசலை யாரும் பார்த்து விடாதபடி வீடியோ எடு அங்கே அடியாள் தெரிந்தால் எனக்கும் தெரியவைக்கிறே என்ன சொதப்பி டாதேடி ""

""பேசாமல் அவுங்க வீட்டுக்கு தெரியவச்சிடலாமே "" சிநேகிதி யோசனை சொன்னாள்

""அலறி போயி அரவிந்தை அது கெட்டுச்சி போ என்று வேலைக்கு அனுப்பாம நிறுத்தி டுவாங்கடி ""

""ஆமாம் இல்ல அப்போ வழியில் புடிச்சி வெட்டிட்டா என்ன பண்றது""

""அங்கே ஜன நடமாட்டம் இருந்துக்கிட்டே இருக்கும் சான்சே இல்லை நான் எப்படி யாவது அவுங்க வீட்டுக்கு வந்துடுறேன்""

""சரி..சரி...""

""ஆன்டி...ஆன்டி...""கதவை தட்டுகிறாள்

"அரவிந்தன் அம்மா வந்து கதவை திறந்து என்னம்மா இந்த நேரத்தில் " என்று கேட்டபடி கதவு திறக்கப்பட்டது

""ஆன்டி...விஷயத்தை சொன்னாள் காதில்....நீங்க...மாடியில் இருந்து கீழே பாக்கறீங்க ஏதாவது உருவம் கண்ணுல பட்டா....காதைக்கொண்டாங்க......சரியா ஆன்டி சொதப்பி டாதீங்க அதே சமயத்தில் எதுக்கும் பயப்படாதீங்க அதுதான் முக்கியம் அதே சமயத்தில் இந்த விஷயம் அரவிந்தனுக்கு தெரிய வேண்டாம் தெரிஞ்சா அப்படிப்பட்ட வேலையே வேணாமுன்னு முடக்கடி பண்ண வாய்ப்பிருக்கு அதனால் சொல்றேன் ""

"" கண்டிப்பாக...நீ சொல்லுகிறதும் சரிதாம்மா ஆனாலும் நீ பயப்படாமல் போம்மா மீதிய நான் பாத்துக்கிறேன் ""

மூன்று மணிக்கெல்லாம் உருவம் தெரியவர ஆன்டி ஆரத்தி காதில் ஓதியது போல செய்தாள் உடனே ஆரத்தி க்கு கைபேசி மூலம் தெரியபடுத்திக்கொண்டே இருந்தார் அரவிந்தன் அம்மா எதிர் வீட்டில் ஆரத்தி யின் சிநேகிதி யும் அவளுக்கு சொன்னதை இரவு முழுக்க உறக்கம் இன்றி ஆரத்தி சொன்னது போல் செய்தாள்

ஆரத்தி போலீசுக்கு மொபைல் மூலம் தகவல் கொடுத்து வரவழைத்து விட்டாள்

செடிகள் மறைவில் ஒளிந்து இருந்த இருவர் மேல் கொதிக்க கொதிக்க எண்ணையை மாடியில் இருந்து சரியாக அந்த இருவர் மேல் ஊற்ற

சுருண்டு விழுந்து எழுந்து ஓட போலீசார் இருவரையும் கைது செய்து கொண்டு சென்றது இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது அதையும் எஸ்.ஐ.க்கு ஆரத்தி அனுப்பி வைத்தாள்

ஆரத்தி ஓரு கம்ப்லைண்டு எழுதி கையெழுத்து இட்டு நீங்கள் வரவேண்டாம் கொடுத்து அனுப்பி வைங்க ஏன்னா உங்க அப்பா என்னை கோபப்பட்டுக்குவார் அதனால் என்று கேட்டுக்கொண்டார் எஸ்.ஐ.

“எங்க அப்பாவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா சார்”

“உங்க அப்பா என் அப்பாவுக்கு தெரியும் என் அப்பா என்னை பற்றி உங்க அப்பாவிடம் கலந்து பேச உங்கப்பா அவரோட சிநேகிதர் கிட்ட சொல்லி வெயிட்டிங்கில் வச்சிருந்த எனக்கு இந்த உடுப்பை நான் உடுத்தும் வாய்ப்பு கிடைக்க வைத்தவராச்சே அதை எப்படி மறக்க முடியுமா அதனால் சொன்னேன் “

“ஓ…அப்படிங்களா….சரிங்க சார்”

இவ்வளவு நடந்தும் அரவிந்தனுக்கு எதுவும் தெரியாது நாலு மணிக்கு எழுந்து குளித்து துணிமணிகளை போட்டுக்கொண்டு அப்பீஸ் புறப்பட்டான்

அந்த இரு அடியாள்களும் கஜேந்திரன் அப்பாவை காட்டி கொடுத்து விட்டார்கள் கூண்டோடு கம்பி எண்ண போனார்கள்

சில நாட்களுக்கு பிறகு ஆரத்தி அரவிந்தன் பற்றி பெற்றோரின் காதில் போட்டு பச்சை கொடி காட்டும் படி வேண்டினாள்

"உலகம் ஆயிரம் சொல்லட்டும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை ஊர் ஒன்று கூடி எங்களை ஒதுக்கி வைத்தாலும் கவலையில்லை நாங்களும் நீங்க இருக்கும் இடத்துக்கு ஷிப்ட் பண்ணிக்கிறோம் அம்மா எனக்கு சாதி மதத்தின் மேல் பற்றும் இல்லை நம்பிக்கையும் இல்லை புள்ளைங்க

சந்தோஷம் தான் எங்க சந்தோஷம் போதுமா கல்யாணம் நடந்தா சொந்தம் பந்தம் யாரும் வரமாட்டாங்க அவ்வளவுதானே அப்படிப்பட்ட சாதி ஜனத் தோட உறவு தேவையே இல்லை "

பெற்றோர் சொன்னார்கள்

தந்தை தாயை கட்டி அணைத்து க்கொண்டு காலில் விழுந்து வணங்கினாள்

அரவிந்தனுக்கு தெரிவித்தாள் "இன்பமோ துன்பமோ இனி எல்லாமும் நீதாண்டா எனக்கு" என்றாள்

"நான் ஒரு வேஸ்ட் இவ்வளவு நடந்தும் இந்த மரமண்டையில ஏறலை பாத்தியா என் உசுரு மேல எனக்கு அக்கறை இல்லை உனக்கு அக்கறை இருந்திருக்கு "

"மனுசன் உசுரு மண்ணு சட்டி மாதிரி அதை நீயும் பொன்னு சட்டி மாதிரி பாத்துக்கோணும் சொல்லுறதை ஏத்துக்கோணும்"

"உனக்கு நான் என்ன கைமாறு செய்தாலும் ஈடாகாது "

"ஆகுமுன்னு நெனைச்சா ஆகும் ஆகாதுன்னு நெனைச்சா ஆகாது"

"எப்படி "

"என்னை கல்யாணம் பண்ணிக்கோ "

"நல்லா ஜோக் அடிக்கிற நீ வேற சாதி நான் வேற சாதி இது சரிவராதுன்னு உனக்கு தெரியாதா என்ன "

"டேய்...சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு கெடைச் சிடுச்சி என்ன முழிக்கிறே எங்க அப்பா அம்மா வைத்தான் சொன்னேன் அதுக்கு மேல சாதியை கோலியடி உன்னை விட எனக்கு ஜாதி ஒன்னும் பெருசா தெரியல என்ன ஊரு ஒத்துக்காது ஒதுக்கி வைக்கும் ஊரை நாம ஒதுங்கி வச்சிட்டதா நெனைச்சி வண்டியை முன்னுக்கு எடு நீ இருக்கும் இடத்தில் ஒரு இடம் பாரு ஷிப்ட் ஆயிக்கிறோம் "

"நூத்துக்கும் துணிஞ் சிட்டே ஆமாம் நீமட்டும் ஏன் சாதியை வெறுக்கிறே

ஒவ்வொரு மனிதனுக்கும் இனின்ன வகை ரத்தம் இருக்குன்னு சோதனை பண்ணி காட்டுவதில் ஆதாரம் இருக்கு

"சாதி சாதியின்னு மனசில இருக்கு வார்த்தையில் இருக்கு ஆனால் அதை நிருபிக்க ஒரு ஆதாரமும் இல்லை "

ஆனால் கருவறை அதை ஏத்துக்கிறது இல்லை என்ற உண்மை எனக்கு தெரிய வந்ததில் இருந்து சாதியை ஒரு தேவையற்ற செய்தியாக கருதி வெறுக்கிறேன் "

சிலையில் தெய்வம் மறைந் திருக்கும் தேனில் மலர் மறைந்திருக்கும் காண முடிவதில்லை உள்ளத்தால் உணர முடிகிறது மனசாட்சிக்கு மட்டும் பயந்தா போதும் மீதி யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்னை பொறுத்தவரை சாதி வெறும் சேதி நேரத்தை வீணாக்காதே வா போய் உன்னை என் அப்பா அம்மா கிட்டே அறிமுகம் படுத்தி வைக்கிறேன் என்று தன் வீட்டுக்கு அழைத்து சென்று அறிமுகம் படுத்தினாள் ஆரத்தி

குடியானவர் வீதியில் இவர்களை கண்டதும் காதுக்கு காது கிசு முசு சங்கீதம் பாடப்படுகிறது மறுநாள் பஞ்சாயத்து சேதி வந்தது ஆரத்தி வீட்டுக்கு

பஞ்சாயத்து:

என்ன தர்மலிங்கம் சேரிப்பசங்க எல்லாம் ஊருக்குள்ள நடமாடுறாங்க, அரவிந்தனும் சென்றிருந்தான் அழைப்பு விடுத்து அல்ல ஆரத்தி குடும்பம் சென்றிருந்ததை வைத்து

“அது அவுங்கவுங்க தேவையை பொருத்து வருவாங்க போவாங்க” என்றார் ஆரத்தியின் அப்பா

அப்போ உங்க வீட்டுக்குள்ள வரைக்கும் நுழைந்த சேரியாளுக்கு என்ன தேவையோ அதை இந்த பஞ்சாயத்து தெரிஞ்சிக்க விரும்புது

என் பெண்ணும் பையனும் பால்ய சிநேகிதர்கள் ஒன்னா படிச்சவங்க இப்போது கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறாங்க

சாதிவிட்டு சாதியிலே பொண்ணு கொடுக்க உங்களுக்கு விருப்பமா நம்ம சாதியை அவமதிக்கும் போல் தெரிகிறது இது சரியா

சாதி மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது அதனால

கொஞ்சம் புரியும் படி

ஆரத்தி எழுந்து நான் பேச அனுமதி கொடுப்பீர்களா

ம்……

மேல் சாதி கீழ்சாதின்னா என்னங்க இன்னவங்க மேல் சாதி இன்னவங்க கீழ் சாதி என்பதற்கு அடையாளம் இன்னதென சொல்ல முடியுமா

கூட்டத்தில் ஒருவன் தலைவருக்கு புடுங்கிகிச்சி பேதி

எல்லாம் சிரித்து விட்டார்கள்

இரும்மா நீ அறியாப்புள்ள விவரிக்க கூச்சப்படுவே நான் எல்லாத்தையும் அனுபவிச்சிட்டவ இவங்கள நான் பாத்துக்கிறேன் நீ அமைதியாக இரும் என்று ஒரு அம்மா எழுந்து நான் சொல்றேங்க

என்னோட பொண்ணும் நீங்க சொல்ற ஒரு சேரிப் பையனோட பழக்கமா இருந்தாள் அதை தடுக்கிற அதிகாரம் எங்க கையில் இல்லை காரணம் அவள் மேஜர்

இதேபோல கூட்டத்தை போட்டு குட்டையை குழப்பி பருந்தலுக்கு விட்டுவிட்டீங்களே ஞாபகம் இருக்கா, அவன் எனக்கு இல்லேன்னா நான் உசுரோட இருக்கிறதே வேஸ்ட் ன்னு உயிரை விட்டுங்கிட்டாளே அவள் என் பொண்ணு ஞாபகம் இருக்கா

அதேமாதிரி இந்த பொண்ணையும் பலி கொடுத்து விடாதீர்கள் இன்னைக்கு எங்க வீட்டில் நாளைக்கு உங்க வீட்டில் நிகழாதுன்னு என்ன நிச்சயம் ஒன்னு பண்ணலாமே

என்ன….தலைவர் கேட்டார்

மேல் சாதிக்கார பொண்ணுக்கும் கீழ் சாதிக்கார பையனுக்கும், அதே போல மேல் சாதிக்கார பையனுக்கும் கீழ் சாதிக்கார பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வையிங்க இரண்டு பேருக்கும் புள்ள தங்கவில்லையானா சாதி எங்கிறதெல்லாம் உண்மைங்க

ஏன்னா புள்ள பொறந்தா கருவறைக்கு எச்சாதியும் ஒருசாதியேன்னு ஏற்றுக் கொள்வதா அர்த்தம் ஏத்துக்கவில்லையானா சாதி சாதிதாங்க அதுக்கு கட்டுப்பட்டுதான் நாம நடக்கனும் என்ன டீலா நோ டீலா பஞ்சாயத்து தலைவர் அவர்களே

கூட்டத்தில் ஒரு குரல் “ புள்ள பொறந்துட்டா”

“சாதி வெறும் சேதிங்க”

மனுஷ சாதியை மதிக்க சொன்னா இங்கே போட்டு மிதிக்கவே செய்றாங்க அது ராங்கு தானே

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவாதிருத்தலே நன்று என்று சொன்ன சொல் வாழ்க அதை சொன்னவனும் வாழ்க வாழ்கவே

•••••••••

ஆபிரகாம் வேளாங்கண்ணி
"கண்டம்பாக்கத்தான் "

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (3-Apr-19, 1:33 pm)
பார்வை : 577

மேலே