கவிந்த மாலை வேளையில்
கவிந்த மாலை வேளையில்
***************************************************
கவிந்தமாலை வேளையில் முழுநிலவின் தண்ணொளியில்
காவிரிக் கரையோரம் மென்மணற் பரப்பினிலே
அவரைக் கொடிபோல என்னோடுநீ படர்ந்தநிலை
ஓவியமாய் என்மனதில் குடிகொண்டு வாட்டுதடி!
பாவையே மதுத்தேன் உதிர்க்கும் இதழாளே
பூவைக்கு ஏதேனும் வருத்தமோ இவன்மீது !--இருந்தும்
ஆவிறுக்கும் பசும்பாலில் அன்றாடம் நீராடும்
காவிலுறை அகிலத்தின் சீரான அருளாலே
பாவரிகள் புனைந்திடுவேன் கற்பனை வளங்கொண்டு
சாவேரி ராகத்தில் உன்னெழில் தனைப்புகழ்ந்தே
ஈவிரக்கம் கொள்ளடியோ சிறிதேனும் என்மீது !