நீ ஓர் வானவில்லடி எனக்கு

வான வில்லிற்கு அழகு அதில்
கூடி இருக்கும் ஏழு நிறத்தால்
பெண்ணே உந்தன் எழிலிலும்
நான் வானவில்லைக் காண்கின்றேன்
சிவந்த தாமரையாம் உன் முகம்
கார்முகிலாம் உந்தன் குழல்
மீனாய் உன் இரு கண்கள்
கொவ்வைப் பழமாய் உன் இதழ்கள்
கொடிபோல உந்தன் சிற்றிடையும்
பொங்கும் எழிலாய் உன் முன்னழகு
அதற்க்கு துணையாய்ப் பின்னழகு என்று
அழகு எழும் கூட நீயும் ஓர் அழகு
வானவில்லாய் காட்சி தருகிறாய் எனக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Apr-19, 5:44 pm)
பார்வை : 339

மேலே