தங்கைக்காக

புல்லின் மேல் உறங்கிக் கொண்டிருக்கும் பனித்துளிகளை எல்லாம்
வான--வில்லின் நூல் கொண்டு தறித்தேன்.....
சந்திரனின் பிறை பறிக்க தேவலோகம் சென்றேன்
வெற்றிக் கொண்டு ஏந்தி வந்தேன் உந்தன் நெற்றியில் சூட.....-----உன்
கண்களுக்கு மையிட
கரு நிறம் தேடி அலைந்தேன் இந்த புவியுலகில்,,,!!!
கண்டு விட்டேன்
என் கரு விழியில்!!!!!...
பாசி---யின்றி பவளம் இல்லை
இவை தவிர வேறெதும் உனக்கோ அழகில்லை!!!!!!!!
என் பாசம் கொண்டு பவளம் செதுக்கினேன்---உன்
கரத்திற்கு அணிய கரா செய்தேன்.....
திங்களின் அணுக்கள் கோர்த்தேன்...
உன் காலின் ஒலி கேட்க!!!!!
அனைத்தும் எடுத்து வந்தேன்
நீ அணிய
நீயோ துயில் கொண்டிருக்கிறாய்||||
உன் விழிகள் திறக்கும் வரை காத்துக் கொண்டிக்கிறேன் உன் அருகினில்\


.........
கரா-வளையல்
துயில்-உறக்கம்.…...

எழுதியவர் : கவிமாணவன் (7-Apr-19, 8:09 am)
சேர்த்தது : Kavimanavan
பார்வை : 494

மேலே