மலையழகா சிலையழகா

மலையழகா சிலையழகா
°°°°°°
°° வேலை கிடைத்த பிறகு தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொன்னாய் வேலை தான் கிடைத்து விட்டதே பெண் பார்க்கலாமா பெற்றோர் தங்கள் கடமை முடியவில்லை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டால் எங்கள் கவலை தீர்ந்து விடும் அதன் பிறகு நாங்கள் கோயில் குளம் என்று எப்போது சுத்துவது, எங்க வேண்டுதல்களை நிறைவு அடைந்து என்று நிறைவேற்றி வைத்த கடவுளுக்கு எப்போது நன்றியுரை கூறுவது, தள்ளாடிப் போகப் போகும் போதா °° என்று கேட்டார்கள் அன்னையும் பிதாவும்

(இவர்களை பெண் பார்க்கச் சொன்னால் சோளக் காட்டு பொம்மைகள் ஊர்நாட்டுக் கட்டைகளை கொண்டு வந்து தலையில் கட்டிவிட்டால் நான் வேலைக்கு போவதா இல்லை அவளுக்கு சீர்திருத்தம் பண்ணி நகரத்து கட்டையாக மாத்துவதா என்று நினைத்தான் சந்திரன் )

°° என்னடா நாங்கள் என்ன கேட்கிறோம் நீ என்ன யோசனை பண்ணிக்கிட்டு காதில் விழாதவன் மாதிரி ஊமை கோட்டானாட்டம் உம்முன்னு உட்கார்ந்து இருக்கிறே °° என்றார்கள் பெற்றோர்கள்

°° இல்லப்பா நானே தேர்ந்து எடுக்கிறேன் இந்த வயதான காலத்தில் உங்களுக்கு ஏன் வீண் அலைச்சல்°° என்றான் சந்திரன்

°° சரி அதுக்கும் எங்களுக்கு சம்மதம் தான் கூடிய சீக்கிறத்தில் முயற்சி எடு °° என்றார்கள்

°°ஒரு …ஒரு..மாசம் பொருங்கப்பா°°

°° சரிசரிசரி…..°°

தன் அலுவலகத்தில் அம்சமாக எலுமிச்சை பழ நிறத்தில் அதிக பருமனாகவும் அதிக ஒல்லியாகவும் இல்லாமலும், பார்க்க படலு மாதிரி படர்ந்த முகமாக இல்லாமலும், மூஞ்செலி முகம் போல கூசா இல்லாமலும், பல்லை கெளப்பிக்கிட்டு அதை மூட உதடுகள் படாத பாடுகளை படாமலும், உலக அழகிகள் ஏழு பேரில் ஒருத்தியைப்போல, ஒருத்தியை பிடித்து இருந்தது அவளின் உருவத்தை தெரிந்து கொண்ட நான் உள்ளத்தை தெரியாது, முழுவதும் தெரிந்து கொண்டுவிட்டு பிறகு ரோட்டை கிராஸ் பண்ணி சந்திக்கலாம், தமது விருப்பத்தை கூறலாம் என்று அவளுக்கு தெரியாமல் அவள் வீட்டை தெரிந்து கொண்டு அவள் இருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு மாதத்திற்கு மட்டும் வாடகைக்கு வீடு கேட்க

(ஏற்கனவே ஒரு குடும்பம் குடியிருந்து கணவன் மனைவி சண்டையால் மனைவி தூக்கு போட்டு இறந்து விட்டதால் அதை கேள்வி பட்டு யாரும் குடியிருக்க வருவதில்லை காரணம் விஷயம் தெரிந்தவர்கள் அட உனக்கு வேறு எங்கேயும் கெடைக்கலையா நடந்த சம்பவத்தை காதை காட்டச்சொல்லி ஓதிவிடுவதும் உண்டு பொதுவாக குடும்பம் இருக்கா என்று கேட்டுதான் வீடே கொடுப்பார்கள் வீட்டுக்காரர் நடந்ததை மறைத்து கல்யாணம் ஆகாத ஒண்டிகட்டைக்கு வீடு கொடுக்க சம்மதித்தார்) “” ஆமாம் அது என்ன ஒரு மாதத்திற்கு மட்டும்””

°° ஐயா உங்கள என் அப்பா மாதிரி நெனைச்சி சொல்றேன் ஒன்னும் தப்பாக நெனைச்சி க்காதீங்க எங்க வீட்டில் கல்யாணம் கல்யாணம் என்று சொல்லி நச்சரித்துக் கொண்டு வருகிறார்கள் நான் நகரத்தில் பொறந்து வளர்தவன் ஊர்ல அந்த பட்டிகாட்டில் இருக்கும் என் அத்தைக்கு இரண்டு பொண்ணு அதுல ஒன்னு ஆக்ராவில் சுத்திப்பார்க்கப்போகும் போது காணாமல் போயிட்டதாம் இப்போது இருக்கிற பொண்ணை என்தலையில கட்டி வைக்க பார்க்கிறாங்க எனக்கு இன்னையவரைக்கும் அத்தை யையும் தெரியாது அத்தை பொண்ணை யும் பார்த்ததில்லை அவங்க இருக்கிறது கிராமத்தில், நானோ பெரிய அலுவலகத்தில் வேலை பார்க்கிறவன் எங்கூட வேலை செய்யிறவங்க வீட்டுக்கு வருவாங்க போவாங்க நாகரீகம் தெரியாமல் வாழும் கிராமத்து பொண்ணு அவங்க எல்லாம் என்னை பீர்ககன் பூவை பார்க்கிறது போல பார்ப்பார்கள் அப்போ என் மனம் சங்கடப்படும் அதனால் எங்க ரெண்டு பேருக்கும் இடையில மனஸ்தாபம் வரலாம் அதனால் அதை அவாய்டு பண்ண என் ஆபீஸ்லேயே வேலை பார்க்கிற பொண்ணை பிடிச்சிருக்கு அவங்க உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தான் இருக்காங்க அவுங்க கிட்ட மூவ் ஆவதற்கு முன்பே அவங்களுக்கு தெரியாமல் அவங்களைப்பத்தி தெரிஞ்சிக்கிட்ட பிறகு பேசறதா இல்லையா என்ற முடிவு எடுக்கலாமுன்னுதான் வீடு கேட்டேன் கொடுக்கிறதா இல்லையான்னு நீங்க முடிவச்சொன்னா நல்லா இருக்கும்°°

°° நல்ல யோசனை நிறைவே பசங்க உன்னை போல சிந்தித்து செயல் படுவதில்லை காஞ்ச மாடு கம்புல விழுந்தது போல விழுந்து விட்டு தங்களது நிம்மதியை தொலைத்திட்டு அவமதிப்பட்டுக் கொண்டு இருக்கிறதை பார்க்க முடிகிறது, நீ இந்த விஷயத்தில் ஜாக்கிறதையா கையாளுறே பாராட்ட வேண்டிய விஷயம், நீ அப்பா மாதிரின்னு வேற சொல்லிபுட்ட, நெஞ்சை தொட்டுட்டே, பொண்ணைப்பத்தி அக்கம் பக்கம் விசாரிப்பதை விட தானே நேரடியாக தெரிஞ்சிக்கிறது தான் நல்லதும், புத்திச்சாலிதனமும் கூட, ஏன்னா பொய்யை மறைக்க தெரியாது உண்மையை உளறிடுவார் சிலர் உண்மையை மறைச்சி பொய்யை பொரிஞ்சி தள்ளுவார் சிலர் இருந்தாலும் இதை கூட உனக்காக நான் சம்மதிக்கிறேன்°° என்றார்

மனதில் நினைக்கிறான் அப்போ இவர்கூட நம்மகிட்ட பகடையாட்டம் ஆடுகிறாரோ என்ற சந்தேகம் °° சரிங்கய்யா இந்தாங்க வாடகை நீங்க கேட்ட பணம் பிடிங்க °° நல்ல வேளை இல்லை என்று சொல்லாமல் சம்மதித் தாரே அதுபோதும் என்று ஒப்புதல் கொடுத்தான் குடி புகுந்து அலுவலகக்காரி மல்லிகாவை நோட்ட மிடலானான் அவளுக்கு தெரியாமல் இரண்டு மூன்று மணிநேரம் மட்டுமே இருப்பான் இது விஷயம் வீட்டாருக்கு தெரியாது, வீட்டுக்கு பயந்து கெளம்பி போய்விடுவான்

பத்து பதினைந்து நாள் நோட்டமிட்டான் அவள் வெளியில் ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுகிட்டாளாம் தாப்பா என்று ஆகிவிடக்கூடாது என்பது அவன் மனக்கணக்கு வெளியில் பதிவரத்தை போல் வருகிறாள் வீட்டுக்குள் பக்கா லோக்கல் போல், போலென்ன லோக்கலேதான் சகிக்க வில்லை , நல்ல வேளை முதலில் பழகவில்லை இல்லை என்றால் நம்ம கதை கந்தலாகி இருக்கும் ஆளைவிடுடா சாமி என்று வீட்டை காலிசெய்து கொண்டான்

வீட்டுக்காரர் கேட்டார் °° என்ன ஆச்சி °° என்று

°° அவள் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்னு தெளிவாக தோனுது பெரியவரே°° என்றான் சந்திரன்

பெரியவர் டீப்பா யோசிக்க உட்கார்ந்து விட்டார் °° என்னடா நம்மகிட்ட கல்யாணம் பண்ணிக்கன்னான் இப்போ என்னடான்னா அவள் அதுக்கெல்லாம் சரிபட்டுவரமாட்டாங்கிறான் ஓ புரிஞ்சி போச்சி இது மேயவந்த மாடு போல தெரியிது °° என்று அவருக்கு அவரே புலம்பினார் பெரியவர்

பிறகு வேறு ஒருத்தியை கண்டான் அவள் யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் பூமியை பார்த்த படி போவாள் வருவாள் அதனால் நல்ல அடக்க ஒடுக்கமானவள் என்று அவளை பிடித்து விட்டது முன்பு போல் அவள் குடியிருக்கும் வீட்டிற்கு அவளுக்கு தெரியாமல் நோட்டமிட்டு அங்கேயும் பக்கத்து வீட்டில் வாடகைக்கு கேட்க அவர்கள் மறுத்து விட்டார்கள் என்ன செய்யலாம் என்று திகைத்துப் போய் நின்றிருந்தான் அவளது குணநலன் நடவடிக்கை இவைகளை அறிந்து கொள்ளாமல் காதல் பண்ணா, கல்யாணம் பண்ணா பின்னாடி அவஸ்தை படக்கூடாது இல்ல என்ன பண்ண லாம் என்று ஒன்றும் புரியாமல் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தான்

அவனது அலுவலக சூப்பிரண்டென்டோட கார் பஸ் ஸ்டாப்பில் நின்றது, காரை விட்டு இறங்கி °° ஹல்லோ மிஸ்டர் சந்திரன் இன்னைக்கு பஸ்சு ஸ்டிரைக்குன்னு உங்களுக்கு தெரியாதா எங்க போகனும் சொல்லு நான் ட்ராப் பண்றேன்°° என்றார்

°° ஐயோ ஆமாங்க நான் மறந்து போயிட்டேன் சார் °° ( இந்த விஷயமே அவனுக்கு தெரியாது ஆனாலும் தெரிந்து வைத்திருந்தவன் போல் காட்டிக்கொண்டு, புதுசா கார் வாங்கி இருப்பான் போல இருக்கு வலியவந்து பந்தாவா லிப்ட் கொடுக்கிறான் என்று தானே நினைத்து கொண்டான்)

°° சரி வா மிஸ்டர் வண்டியில்
உட்காரும் °°


°° இல்லங்க சார் ரொம்ப தேங்ஸ் நான் ஆட்டோ புடிச்சி போயிக்கிறேன் சார்°°

°° பக்கத்தில் தான் வீடு முதலில் வீட்டில் அட்டன்டன்ஸ் போட்டுவிட்டு அப்படியே ஒரு கப் காபி குடிச்சிப்புட்டு உடனே கெளம்பிடலாம் °°

ஆளை விடமாட்டான் போலிருக்கே °° சரிங்க சார்°°

நேராக அவன் நோட்டமிட்டு வந்த பெண்ணின் பக்கத்து வீடு அவரோட வீடு, ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு கடவுள் கண்ணை திறந்துட்டார் இதுதான் நமக்கு போல் இருக்கு கன்பார்மா தெரிஞ்சி போச்சி இல்லேன்னா கரைக்டா ஆளை அனுப்பி கரைக்டான இடத்தில் கொண்டு வந்து அவளை கரைக்ட் பண்ண வச்சிருப்பானா ஹலோ காட் தேங்க்யூ சோமச், இன் மை லைஃப் ஐ நெவர் பர்கெட் யூ என்று மனதில் நினைத்திருந்தான்

°° ஹலோ சந்திரன் காபி போட்ராங்க அதுக்குள்ள நாம மாடிக்கு போயிட்டுவந்திடலாம் வாங்க என் நண்பர்களோடு உங்களை அறிமுகப் படுத்தி வைக்கிறேன் °°

அங்கே கூண்டில் அடைக் கப்படாத பறவைகள் °° எனக்காக பட்டினியா காத்துக்கிட்டு இருக்கும் வீட்டுக்கு போய் நான் வந்து விட்டேன் என்று அட்டன்டென்ஸ் போட்டுவிட்டு என்று சொன்னேனே அது இவங்களுக் குத்தான் °°

°° நான் நினைத்தது வீட்டில் இருப்பவர்களைன்னு நினைத்தேன் °°

°° அவங்களா அவங்க யாரும் என்னை கண்டுக்கிறது இல்லை அதனால அவங்களை நான் கண்டுக்கிறது இல்லை °°

°° ஏன் அப்படி °°

°° என் மனைவி இருக்காங்களே அவங்க அண்ணன் தம்பிங்க எல்லாம் டேபிலுக்கு கீழ வாங்கி பணக்காரர்கள் ஆகிவிட்டார்களாம், பிளாக் வாங்கிட்டாங்களாம், இதுவும் இருக்கே தெண்டமேன்னு என்று புறம் பேசுவார்கள் நான் காதில் போட்டுக் கொள்ள மாட்டேன் கிம்பளத்தை எதிர்பார்க்கிறா அது நம்மலால முடியாது அதனால யாரும் ஏங்கிட்ட பேச்சே வச்சிக்கிறது இல்ல இதோ இவங்க தான் எனக்கு அப்பா அம்மா சகோதர சகோதரிகள் இன்னும் உறவினர்கள் எல்லாமும் இவங்கதான் °°

°° லஞ்சம் வாங்குறது குற்றம் இல்லையா °°

°° அது எங்க அவங்க தலையில் ஏறுது °°

°° என்ன இது குடியிருக்கிற இடத்தில் இவ்வளவு சவுண்டா ஸ்பீக்கரை காது ஜவ்வு கிழிஞ்சிக்கிற மாதிரி °°

°° அது வேற ஒன்னும் இல்லை நம்ம அப்பீஸ்ல வேலை பாக்குது இல்ல கனகா எங்கிற பொண்ணு அதுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம் அதான் ஸ்ப்பீக்கர் °°

°°யாரு நம்ம கோமளவள்ளி மேடம் பக்கத்து டேபிலில் உட்கார்ந்து இருக்குமே அதன் பெயர் கனகாவா°°

°°அதேதான் °°

சந்திரனுக்கு அடிச்சது ஷாக்கு அட கடவுளே ஆசைகாட்டி இப்படி மோசம் பண்ணிட்டீயே என்று மனதால் கடவுளிடம் முறையிட்டும் கொண்டான் °°சரிங்க சார் வீட்டில் தேடுவாங்க°°

°°வா காப்பி ரெடியாயிட்டு இருக்கும் குடிச்சிப்புட்டு கெளம்பலாம்°°

சந்திரன் வீட்டுக்கு வந்தான் சோகம் தாண்டவம் ஆட ஒரு வேள பெத்தவங்க பேச்சை கேட்காததாலோ இப்படி நடக்கின்றது நமக்கு என்று சிந்திக்க லானான் ஆறு மனதே ஆறு என்று டீவியில் பாட்டு பாடியதை கேட்டு ஒருவேளை எனக்காகத்தான் பாடுகிறதோ மனம் ஆறினான் சந்திரன்

மறுநாள் அலுவலகம் சென்றான் °° என்ன சந்திரன் இத்தனை நாளைவிட இன்னைக்கு நீ கொஞ்சம் டல்லா இருக்கிறமாதிரி தோணுதே எனி பிராப்லம் °°

°°நத்திங்…ஐ... ஆம்…. ஓகே…சார் °°

°°சந்திரன் ….நம்ம ஸ்டென்னோ மகேஷ்வரி ஐயங்கார் அந்த பொண்ணு உம்மை விரும்புறான்னு தோனுது உன்னையே பார்த்த படி இருக்கிறா°°

°°சார் நான் பறையர் வகுப்பை சார்ந்தவன் சார், அவங்க பிராமினர் அவங்க யாரை பார்கிறாங்களோ அவங்க என்னை பார்க்கிற மாதிரி உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும் °°

°°இல்லை சந்திரன் நம்ம ஹெட் டைப்பிஸ்ட் உமா இல்லையா அவக்கிட்ட மனச தொறந்து உன்னை பத்தி பேசியிருக்கா, உமாவும் என்னோட மகளும் திக்கெஸ்டு பாலிய சிநேகிதிகள் உமா என் பொண்ணு கிட்ட ஷேர்பண்ணி இருக்கிறா என் பொண்ணு அவ அம்மா கிட்ட சொல்லியிருக்கா அவ அம்மா ஏங்கிட்ட சொல்லித்தான் எனக்கு தெரியுமே தவிற மற்றபடி நான் யாரையும் நோட்டீசு பண்ணல அந்த பழக்கம் ஏங்கிட்ட இல்லை எதுக்கும் நீயே தெரியாத மாதிரி கவனிச்சி பாரு ஆனா நீ எந்த வகுப்புன்னு அவளுக்கு தெரிஞ்சி வகுப்பை தூக்கி குப்பையில போடு வயிறு பசிச்சா கேப்பையானாலும் தொப்பையில போடு இதுதான் என்னோட பாலிஸின்னு டைலாக் அடிச்சாளாம் °°

°°சார் அப்படின்னா ஐ ஹாவ் நோ அப்ஜெக்ஸன் சார் நாளைக்கே கண்டு பேசி முடிவே பண்ணிடுறேன் ஆமாம் இதுக்கு அவங்க வீட்டார் ஒத்துப்பாங்களா°°

°°ஏம்பா பொண்ணு ரெடியாயிட்டா கழட்டிவிடத்தான் நெனைப்பாங்க ஒரு பார்மாலிட்டிக்காக கேப்பாங்க தான் லவ்வு கிவ்வுன்னு ஒரு ஜவ்வை காதுல போட்டாள்னா கம்முன்னு கொந்திக்குவாங்க °°

°°சார் தேங்யூ சோமச் சார்°°

அதே சந்தோஷம் வீட்டுக்கு போனான் அப்பாவும் அம்மாவும் மகனை ஆச்சரியமாக பார்த்தார்கள் °° ஏண்டி நம்ம பையன் இன்னைக்கு என்னைக்கும் பார்க்காத சந்தோஷத்தை பார்க்க முடியிதே நாமாக கேட்க வேண்டாம் அவனாக சொல்லட்டும் ஒரு வேளை புறாவை புடிச்சிட்டானோ அதுவரைக்கும் நீ மூச்சு விடக்கூடாது°°

°°ஐயோ மூச்சு விடலன்னா நான் செத்து போயிடுவேனே°°

°°என்ன ஜோக்கா°°

மறுநாள் சந்தோஷ சேதியை உருவாக்க இருந்தவனுக்கு துக்க சேதி கிடைத்தது அறண்டு போனான் சந்திரன்

சூப்பிரென்டென்ட் சந்திரனுக்கு சொன்ன பெண், பணி முடிந்து வீட்டுக்கு போனாள் அவளது தம்பி °°அக்கா இன்னைக்கு புதுப்படம் ரிலீசுக்கா வீட்ல நான் கேட்டா அனுப்ப மாட்டாங்கக்கா ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா °°

°°சரிசரி…நீ…துணியை மாத்து நான் பர்மிஷன் வாங்குறேன்°° என்றாள் அக்கா

°° நீங்க பேசிக்கொண்டதை யெல்லாம் கேட்டுகிட்டுதான் இருந்தோம் பத்திரமாக போயிட்டு பத்திரமாக வாங்க ஆமாம் அக்காளும் தம்பியும் சினிமாவுக்கு போகனுமுன்னு முடிவு எடுத்தீங்களே முதல் ஷோவுக்கே போயிருக்கலாமே இரண்டாவது ஷோவுக்கு ஏன், போய் வரும் போது உசாரா வாங்க°° என்றாள் அம்மா

ஆட்டம் முடிந்து வரும் போது மூன்று பேர் நல்ல போதையில் பெண்ணையும் சிறுவனையும் வளைத்துக் கொண்டார்கள் பையன் சத்தம் போட்டான் அவனை பிடித்து கரண்டு மரத்தில் கட்டி வாயில் துணியை அடைத்து பெண்ணை மூன்று பேரும் சேர்ந்தே கர்பழித்துக் கொண்டிருந். தார்கள் பையன் திமிரி கட்டவிழ ஓட்டமாக ஓடி போலிஸ் ஸ்டேஷனில் விஷயத்தை சொல்லி நடந்த இடத்தையும் சொல்லி விட்டு வீட்டுக்கு ஓடி விஷயத்தை சொல்லி கதறினான் துடித்து ஓடி வந்தார்கள் பையன் இடத்தை காட்டினான் பெண் அலங்கோலமாக வேலி ஓரத்தில் கிடப்பதை கண்டு கதறி அழுது அப்பா பெண்ணை தோளில் சுமந்து நேராக போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள் பையன் சொல்லி விட்டு போன இடத்துக்கு போலீஸ் போய் தேடியது அதற்குள் ஸ்டேஷனில் இருந்து தேடப்போனவர்களுக்கு அவர்கள் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார்கள் நீங்கள் திரும்பி வாங்க என்று செய்தி அனுப்ப, போனவர்கள் திரும்பும் போது ஒருவன் மறைந்து இருப்பதை அறிந்து அவனை பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு போனார்கள் கொண்டு போன ஆளை கண்டதும் பையன் °° இவன்தான் இவன் கூட இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள்°° நல்ல போதையில் இருந்த அவன் மேல் தண்ணீர் ஊற்றி கேட்ட போது உண்மை யை ஒத்துக்கொண்டான் அவன் மூலமாக மற்றும் இரண்டு பேரையும் பிடித்து வந்தார்கள். மூன்று பேரும் மிரட்டி உருட்டி கேட்க கிடைத்த விஷயம்

அதில் ஒருவன் °°அப்பெண்ணை நான் காதலிக்கிறேன் அதற்கு அவள் சம்மதிக்க வில்லை நான் அவளோடு வாழ ஆசைப்பட்டு அவள் என்னை கட்டவில்லையென்றால் வேறு யாரோடும் வாழ விடுவதில்லை என்று எடுத்த முடிவின் விளைவுதான் இது, நீங்கள் எப்படியும் வருவீர்கள் உங்களிடம் நான் பிடிபட வேண்டும் என்றே ஓடாமல் ஒலிந்திருந்தேன் இவ்வளவு நடந்த பிறகும் நான் கவலைப்படுவதாக இல்லை அவளை நானே கட்டிக்கொள்கிறேன் என் உயிரை எடுத்தாலும் அதற்காக நான் கவலைபடவில்லை அவளை என்னோடு சேர்த்து வையுங்கள் வேறு வழியில்லை இனி எவனும் அவளை கட்டிக்கப் போவதில்லை அதனால் அவளை என்னோடு வாழ விடுங்கள்°° என்றான்

இதுகுறித்து நாலேடுகளில் செய்திகள் வந்து விட்டது பிடிபட்ட மூன்றுபேர் புகைப்படமும், பெண்ணின் புகைப்படமும் வந்துவிட்டது

சந்திரன் மூன்றாவது முறையும் தோற்று ப்போனான் இந்த விஷயத்தை சந்திரன் யாரிடமும் பேச விரும்பவில்லை

நல்ல வேளை கடவுள் ஒதுக்கி விட்டுவிட்டான் போதுண்டா சாமி பெத்தவங்கள் பேச்சை உதாசீனப்படுத்தியதின் பிரதிபலனாக இருக்குமோ, இனி என்ன நாகரீகமான பொண்ணு வேண்டிக்கெடக்கு என்று யோசிக்க லானான்

மறுநாள் அலுவலகத்தில் சூப்பிரன்டென்ட்டு தயங்கி தயங்கி சந்திரனின் பக்கத்தில் வந்தார் °°என்ன சந்திரன் எப்படி யெல்லாம் நெனைச்சோம் கடைசியில் இப்படியாயிடுச்சே°° என்றார்

°°நமக்கும் மேல ஒருவன் அவருக்கு கடவுள் என்று பெயர் சூட்டினவங்க எல்லாம் என்னைப்போல லோலுபட்டு லொங்கழிஞ்சவங்களா தான் இருக்கும் ரியலி காட் இஸ் கிரேட் சார் °°

°°எதைவச்சி சொல்றே°°

°°நீங்கள் சொன்னபடி நான் அவளை மீட் பண்ணியிருந்திருந்தால் என் பெயரும் நாளேட்டில் வந்து இருக்கும் அதை கேள்வி பட்டு என் அப்பாவும் அம்மாவும் மானம் தாங்காமல் தூக்குபோட்டு என்னை அனாதையாக விட்டுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டு இருப்பார்கள் ஆனால் அப்படி எதுவும் நடக்கவிடல அந்த கடவுள் அதவச்சி சொல்றேன் சார் °° என்றான் சந்திரன்

°°இனிமேல் நானா பொண்ணு பார்க்கிற மாதிரி இல்லை பொருப்பை என்னை பெத்தவங்க கிட்டேயே விட்டுவிடப் போறேன் சார் °°

°°நல்ல முடிவு°°

வீட்டுக்கு போனான் அப்பாவிடம் °° அப்பா நீங்கள் எந்த பொண்ணை சொன்னாலும் எனக்கு சம்மதம் பாருங்க °° என்று சொல்லி விட்டான்

தன் உறவினர்கள் இடம் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தார் அவர்களை சந்தித்து பேச பயணமானார் அங்கே கிடைத்த பதில் °°அவளுக்கு கல்யாணம் ஆகி ஒருவருஷம் ஆகி இப்போது குழந்தை கையில் இருக்கிறது°° என்றார்கள்

°°நானும் சந்தேகமாக தான் வந்தேன் சந்தேகப்பட்டது சரியாக தான் இருக்கு°° என்று கூறி வீடு திரும்பினார்

°°சந்திரன் என்னோட பால்ய சிநேகிதன் இந்தா இந்த விலாசத்தில் போய் பாரு நான் இன்னார் மகன் என்று சொல்லு மீதி விஷயத்தை அவரே உனக்கு சொல்வார்°° என்று சந்திரனை அனுப்பினார்

சந்திரன் சரியான விலாசத்தில் போய்சேர்ந்து °° நான் இன்னார் மகன்°° என்றான்

°°அப்படியாப்பா வாவா உட்கார் என்று உட்கார வைத்தார் பொண்ணோட அப்பா, அப்பா அம்மா எல்லாம் சௌக்கியமா இருக்கிறார்களா நான் உங்க அப்பாவை பார்த்து முன்னேறினவன்பா சரி உனக்கு பொண்ண காட்ட முடியல°° என்று அவர் ஒரு விலாசத்தை கொடுத்து °° என் பொண்ணு இருப்பா போய் பேசிட்டு போயி எனக்கு போன் பண்ணு°° என்று அனுப்பினார்

அந்த விலாசத்தில் ரெட் லைட்டு சம்பவம் நடக்கும் இடமாக இருந்ததை தெரிந்து கொண்டான் ஆனாலும் தப்பாக எண்ணவில்லை கண்ணால பார்க்கிறதும், காதால் கேட்கிறதையும் வைத்து தவறாக எடைபோடக்கூடாது தீர விசாரித்து விடுவோமே என்று கேட்டுக்கொண்டு உள்ளே போனான் அங்கே ரிஷப்னிஸ்டை சந்தித்து பெண்ணின் பெயரைச்சொல்லி பார்க்கனும் என்றான்

°°சரிசரி அப்படி உட்காருங்கள் இப்போது ஒரு கஷ்டமர் கிட்ட டிஸ்கசியன் நடந்திக்கிட்டு இருக்காங்க அது முடிஞ்சதும் வந்துடுவாங்க°° என்றார்கள்

கொஞ்சம் நேரம் கழித்து சேதி கேட்டு அறையும் குறையுமாக வந்தாள் அப்போது அவனது சந்தேகம் நிச்சயம் ஆனது பெண்ணு பார்க்க வந்த விஷயத்தை மறைத்துவிட்டான்

°°ஒன்னும் இல்லங்க என் அப்பாவும் உங்க அப்பாவும் பால்ய சிநேகிதர்கள் எங்க அப்பா அவரை பார்த்து விட்டு வரச்சொல்லி என்னை அனுப்பி வைத்தார் உங்க அப்பா சொன்னார் நீங்க இங்கே இருக்கிறதா அதான் சின்ன வயதில் பார்த்தது அப்படியே உங்களையும் பார்த்து விட்டு போகலாமேன்னு °°

°°சரி குடிக்க என்ன எடுத்துப்பீங்க °°

°°ஐயய்யோ இப்போது தான் உங்க தகப்பனார் கொடுத்தார் நீங்க சொன்னதே போதுங்க அப்போ நான் போயிட்டு வர்றேங்க °°

°°சரிசரி…….ம்…ஒன்.. மினிட் என் தலைவிதி நான் இங்கே வந்து மாட்டிக்கிட்டேன் அது என்னோட போகட்டும் நான் என் அப்பாவிடம் பெரிய பதவியில் இருப்பதாக பொய் சொல்லி காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் அவர் வயதானவர் திடீர்னு தவறிட்டா என்ன பண்றது அனாதையாக கிடப்பாரே என்று இந்த இடத்து போன் நெம்பரை கொடுத்து வைத்திருந்தேன் அதைத்தான் உனக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார் °°

°°எப்படி இங்கே வந்து°°

°°சந்திரன் தானே உங்க பேரு… அது பெரிய கதை இப்போது நான் சொல்லும் நிலைமையில் இல்லை ஆனாலும் யாருகிட்டயாவது சொல்லனும் போல தோனுது ஒருத்தன் உன்னை சினிமாவில் உன் அழகுக்கு அப்படியே கொந்திக்குவாங்க அந்த லைன்ல எனக்கு அவனத்தெரியும் எனக்கு இவனத்தெரியும் வா அறிமுகப்படுத்தி வைக்கிறேன்னு நடிகர்கள் கூட புகைப் படம் எடுத்து இருந்ததை காட்டினான் நான் ஏமாந்துட்டேன் கடைசியில் இங்கே கே கொண்டு வந்து எனக்கு தெரியாமல் விற்று பணம் வாங்கி கொண்டு ஓடிவிட்டான் நான் இங்கே மாட்டிக்கிடேன் அப்படி இப்படி நகரகூட விடாம இந்த தொழிலை பண்ணவச்சிட்டானுங்க இப்போது சூழ்நிலை சரியில்லை மீதியை விவரமாக இன்னொரு தடவை நாம சந்திக்கும் வாய்ப்பு கெடைச்சா அப்போ சொல்றேன் இப்போது என்னை சந்திச்சத பத்தி °°

°°இல்லங்க நான் உங்கள் சந்திச்சதா யாருகிட்டேயும் மூச்சு விடமாட்டேன்ங்க என்ன நம்புங்க °°

°°நம்பறேன்…சரி..போயிட்டு வாங்க.ம்… உங்களை நான் எப்படி கான்டாக்ட் பண்றது°° ஒரு காகிதத்தை எடுத்து எழுதி கொடுத்துவிட்டு வெளியில் வந்தான் சந்திரன்

இந்த லோகத்து க்கு எனக்கு கல்யாணம் கிடையாது இனிமேல் வீணா அலட்டிக்கக் கூடாது அவ்வளவு தான் என்று நினைத்தான் வீடு வந்தான் சந்திரன்

°°என்னப்பா என்னாச்சு போனது°°

°°இல்லப்பா அவரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிற மூடுல இல்லையாம் அதான் வந்துட்டேன்°°

°°அதுவும் ஒரு நல்லதுக்காகத்தான் இருக்கும் கவலையை விடு °° என்றதும் சந்திரன் அப்பா வின் நண்பர் ஒருவர் வந்தார் அவரை வரவேற்று உட்காரவைத்தார்

°°நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை க்காக இத்தனை நாள் காத்திருந்தேன் ஆனால் என் பொண்ணோட வயசு காத்திருக்க மாட்டங்குதே அதனால தெரிஞ்சிக்கிட்டு போகலாமுன்னு புறப்பட்டு வந்துட்டேன்°°

°°அப்பா சம்மதம்சொல்லி சம்மந்தத்தை உறுதி படுத்திடுங்கப்பா°° என்றான் சந்திரன்

°°சம்மந்ததில் ஏதாவது வில்லங்கம் இருக்குமோ ன்னு தோனுது ஏன்னா தானா வந்து ஏதாவது பானா காட்டுறானோ எதுக்கும் °°

°°இல்லப்பா நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னு சொன்ன சொல்லை மறக்காமல் காப்பாற்றி இருக்கிறார்ன்னு நெனைங்களேப்பா °°

°°சரிசரி °°

கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்தேறியது மணமேடையில் பொண்ணும் மாப்பிளையும் அமர்திருந்தார்கள் மாலையும் கழுத்துமாக ஐயர் மந்திரத்தை ஓதினார் தாலியை வந்தவர்களின் ஆசீர்வாதத்தோடு மணவரைக்கு வந்தது ஐயர் கடிகாரத்தை பார்த்தார் தாலி மாப்பிள்ளை கைக்கு போனது ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று முழங்கினார் பெண் தோழிமாலையை விலக்கப்போனாள் தொப்பென்று கீழே சாய்ந்தாள் பெண் உடம்பில் அலங்காரங்கள் அத்தனையும் அசக்குலையாமல் இருந்தது ஆனால் உடம்பில் உயிர் இல்லை

அவள் வேறு யாரையோ காதலித்து இருக்கிறாள் வீட்டில் எதிர்ப்பு பலமாக எல்லையை மீறி இருந்ததால் விஷம் அருந்திவிட்டாள்

பிரேதப் பரிசோதனை யில் அவள் மூன்று மாத கர்ப்னியாக இருப்பது தெரிய வந்தது இழவு வீடாகிவிட்டதால் ஞாயம் பேசும் சூழல் இல்லை மூட்டை முடுச்சிகளை கட்டிக்கொண்டு வீடு திரும்பினான் சந்திரன்

°°அப்பா நீங்கள் சந்தேகம் பட்டது நிஐமாயிடுச்சேப்பா நாம நிராகரித்து இருந்திருந்தால் அவள் உயிரோடு இருந்திருப்பாள் அவளுக்கு ஒரு விமோசனம் கிடைத்து இருக்கும் அவள் யாரை விரும்பினாளோ அவனோடே வாழ வழி பிறந்து இருந்திருக்கும் அவள் இறப்புக்கு நாம காரணமாயிட்டோமோன்னு மனசு சங்கடமாயிருக்குப்பா°° என்றான்

°°இல்லை….. நண்பர்கள் என்ற போர்வைக்குள் நயவஞ்சகர்கள் நடமாடுகிறார்கள் யாரையும் சாமான்யர்கள் என்று நம்பிவிடாதே என்ற எச்சரிக்கை இது, நல்ல வேளை தாலியை கட்டுவதற்கு முன் அவளோட சுய ரூபத்தை காட்டிட்டா அதனால் நாம் தப்பிச்சோம் இதுவே தாலியை கட்டிவிட்ட பிறகு தெரிந்திருந்தால் என்ன கதி ஆகியிருக்கும்ஜ°° என்றார் அப்பா

°°அப்பா இனி கல்யாணம் பேச்சே கிடையாது நமக்கு சமைச்சிப்போட துணிமணிகளை கசக்கி கொடுக்க ஓரு வேலையாள் வச்சிக்கிடலாம் அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க போதும்°° என்றான் சந்திரன்

°°இனி அதுதான் வழி வேற வழியே இல்லை°° என்றார் அப்பா

மதில்கதவு அழைப்பு மணி சப்தம் கேட்டு வந்து பார்க்க ஆறேழு அன்னை தெரேசா ரூபத்தில் காணப்பட்டனர் சந்திரன் ஓடி கதவை திறக்க நின்றிருந்தவர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் வணக்கம் பரிமாற்றம் நடந்து

°°வாங்க…வாங்க….உட்காருங்கள்…அப்பா இவங்க ஏதோ பேசனும் போல இருக்கு என்ன கேளுங்க °°

°°என்ன…சொல்லுங்க…°°

°°நாங்கள் ஆதுபாது இல்லாத பிள்ளைங்க பராமரிப்புக்காக ஏதாவது உதவி கேட்க வந்தோமுங்க°°

°°அப்படியா…சரி…எங்கிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்க °°

°°எங்க காப்பகத்தில் இருந்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு யுனிவர்சிட்டி பரிட்சை எழுத சீட்டு வாங்க எங்களிடம் போதிய இருப்பு இல்லை அதனால இப்படி வசூல் பண்ணி °°

°°ஓ…..கல்லூரிக்கு போய் படிக்கும் அளவுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா பரவாயில்லையே ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டீங்களே °°

°°சொல்லுங்க சார் ஒன்னும் தப்பாக எடுத்துக்க மாட்டோம் °°

°°உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா அதிலே ஒரு பெண்ணை நாங்கள் படிக்கவச்சிக்கிறோம் வீட்டோடு வச்சிக்க ஆசைப்படுறோம் அதுக்கு கல்யாணம் முதல் எல்லா பொருப்பையும் நாங்களே ஏத்துக்கிறோம் என்ன சொல்றீங்க °°

°°அப்படியா அப்போ எங்க பிரின்பாலை மீட் பண்ணி பேசுங்க எங்களுக்கு கேட்க சந்தோஷம் தான் இந்தாங்க முழு விலாசம் இதுல இருக்கு அவங்ககிட்ட பேசுங்க°° என்றார்கள்

°°சந்திரன் ………°°

°°எவ்வளவு ப்பா °°

°°நீங்கள் மொத்தம் எத்தனை பேருக்கு சீட் வாங்கனும் °°

°°மொத்தம் பத்துபேருங்க °°

°°அவங்க பேரை எழுதிகொடுங்க இதுக்கு ரசீதும் கொடுங்க ஏன்னா எங்களுக்கு இன்கம் டாக்ஸ்க்கு கணக்கு காட்டவேண்டும் அதனால °°

°°சந்திரன் ….ஒரு இருபத்தைந்து ஆயிரம் செக் எழுது °°

°°சரிப்பா……… °°சந்திரன் செக்கை கொடுத்தான்

எல்லோரும் நன்றி கூறி °° நீங்க நேரடியாக வாங்க உங்களுக்கு யாரை புடிக்குதோ அந்த பெண்ணை தேர்ந்து எடுங்கள் எங்க பிரின்ஸ்பால் தங்கமானவங்க கண்டிப்பாக சம்மதம் சொல்லுவாங்க °°

°° உங்க எக்ஸாம் முடிந்ததும் இந்த எண்ணில் இன்பார்ம் பண்ணுங்கள் ஏன்னா சில இக்கட்டான சந்தர்ப்பத்தை சந்திக்க நேர்ந்தால் பெண்கள் சொந்த காலில் நிற்க துணையாய் நிற்பது, கைகொடுப்பது படிப்புதான் °°

°°ரொம்ப தேங்ஸ் சார் , நாங்க வரோம் சார் °° விடைபெற்றார்கள்

சில நாட்கள் கழித்து காப்பகத்தில் இருந்து போன் வந்தது ஒரு நாள் அப்பாவும் சந்திரனும் பறப்பட்டு போய் பிரின்ஸ்பாலை சந்தித்து பேசினார்கள்

அந்த பத்து பெண்களை அழைத்து வந்து காட்டினார்கள் அதில் ஒருத்தி சந்திரனின் அப்பாவின் தங்கையை உரித்து வைத்ததுபோல் இருந்தாள்
அவளை கவணத்தில் வைத்துக்கொண்டார் சந்திரனின் அப்பா ,பெண்களை அனுப்பி விட்டார் பிரின்ஸ் பால்

°°உங்களுக்கு அடையாளம் தெரிந்து கொள்ளவே நெம்பர் போட்ட பேட்ச்சை போடவைத்தேன் இப்போது சொல்லுங்கள், ம்...ம்..சொல்ல வேண்டாம் இந்தாங்க இந்த காகிதத்தில் நீங்க செலக்ட் பண்ண நெம்பரை எழுதி இந்த டப்பாவில் போடுங்கள் ஏன்னா உங்களுக்குள்ள விருப்பு வெறுப்பு வந்து விட கூடாது இல்லையா அதனால் நீங்க இப்போது கலந்து பேசிக்கொள்ள வேண்டாம் நம்பரில் மாறுபாடு தோன்றும் பட்சத்தில் கலந்து பேசலாம் என்றார் பிரின்ஸ்பால் °°

°°சரிங்க மேடம் °°

பிரின்ஸ்பால் எடுத்து பிரித்து சொன்னார் நெ.3 அப்பா முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது

அப்பா நானும் நெ.3 தான் எழுதிப்போட்டேன் மூனு சொன்னதும் உங்க முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தேன் கன்பார்மா ஆயிடுச்சி

°°சரி இந்த பொண்ணோட ஹிஷ்ட்ரி அதாவது எப்படி உங்க வளர்ப்பின் கீழ் அமைந்தது என்று தெரிஞ்சிக்கலாமா °°

°°ஓ...எஸ்...ஒருமுறை பிள்ளைகளை பிக்னிக்குக்காக ஆக்ராவுக்கு போனோம் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் சுற்றி காட்டிவிட்டு திரும்பி ட்ரெய்ன்ல உட்கார்ந்தோம் வண்டி புறப்பட்டுவிட்டது எங்களுடைய ரிசர்வேஷன் ஒன்றில் இருந்து இருபத்தைந்து வரை தான்

பிள்ளைகள் பாத்ரூமுக்கு இரண்டு மூன்று பேர் சென்றிருக்கிறார்கள் அப்போது கடைசி சீட்ல படுத்து இருந்து இருந்திருக்கிறாள் பிள்ளைகள் ஓடிவந்து என்னிடம் சொன்னார்கள் நானும் போய் பார்த்தேன் எழுப்பினேன்
உடம்பு கோதியாய் கொதித்தது பசிபோல இருக்கு அவளால் உட்காரகூட முடியல போய் போய் விழுறா பிள்ளைகள் அதற்குள் உண்ண கொடுத்தார்கள் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டாள் உங்க அம்மா அப்பா எங்கே என்னும் கேட்க தெரியாது என்றாள் எங்களோடு அழைத்து கொண்டு வந்து விட்டோம், உங்க ஊர் பெயரை தெரியுமா என்று கேட்டோம், தெரியாது என்றாள், சொல்லியிருந்தால் எந்த வழியிலாவது கொண்டுவந்து சேர்த்து விட்டு இருப்போம், உங்க அம்மா பெயர் என்ன என்று கேட்டோம் மகேஷ்வரி என்றாள் உங்க அப்பா பேரை கேட்டோம் °°

உடனே சந்திரனின் அப்பா எழுந்து °°ராமநாதன் என்று சொன்னாளா °°

°°ஆமாம்°°

°°அப்போ அவள் பெயர் வந்தனா தானுங்களே °°

°°கரைக்ட் ராமநாதன் என்று தான் சொன்னாள், அவள் பெயர் வந்தனா தான் ஆமாம் °°

°° மேடம் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் அவகிட்ட இருக்கு அது இருந்து விட்டால் நான் நெனைக்கிற தப்பே இருக்காது ஏன்னா பெயரளவில் ஒரே பெயர் பல பேருக்கு இருக்க வாய்பிருக்கிறது இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் எல்லோருக்கும் இருக்க வாய்பில்லை°°

°° என்ன விஷயம் அது சொல்லுங்கள்°°
என்று பிரின்ஸ்பால் கேட்டார்கள்

°° அந்த குழந்தைக்கு லெப்ட் ஹாண்டுல ஆறு விரல்கள் இருந்தால் அவளேதான் °°
நோ...டவுட்.. யூ..ஆர்...ஹன்ரட் பர்சன்ட் கரைக்ட். சார் இதை நான் கடைசியாக கேட்க இருந்தேன் நீங்க முந்திக்கிட்டீங்க இதெல்லாம் °°

°° உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா அவள் என் கூட பொறந்த தங்கையின் மகள் மேடம் அவள் தொலைந்ததும் அதே ஆக்ராவில் தான்
என்னென்னவோ பண்ணிப்பார்த்தார்கள் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது, வடநாடாச்சா, இந்தி மயம் இவங்க பேசுறது அவங்களுக்கு புரியவில்லை , அவங்க பேசுறது இவர்களுக்கு புரியல புலன் கிடைக்க வில்லை அவள் நினைவாகவே பித்தாகிவிட்டாள் என் தங்கை மேடம் °°

°°ஆஹா இறைவன் கருணையே கருணை சும்மாவா சொன்னார்கள் ஒவ்வொரு அரிசியிலும் எழுதப்பட்டு இருக்கிறது அதை. உண்ணப் போகிரவரின் பெயர் என்று அதேபோல் இன்னார் இன்னார், இன்னார் இன்னாருக்கு என்று ஆண்டவன் கணக்கு ரியலி வாட் எ மிராக்கல் ப்லேஸ்டு பை தி லார்டு °°

°°நான் செலக்ட் பண்ணதும் எங்கள் வீட்டில் உள்ள குரூப் போட்டோவில் காணப்பட்டவர்கள் முகச்சாடை நினைவுக்கு வந்தது அதைவைத்து செலக்ட் பண்ணேன் மேடம் °°

°°இப்போது அவளை பெற்றவர்கள் °°

மேடம் தங்கை காலமாகிவிட்டாள் அவளின் கணவனுக்கு கண்பார்வையை இழந்து விட்டு வீட்டோடு இருக்கிறார்

இதைத்தான் இரத்த பந்தம் என்பது
போல் தெரிகிறது வந்தனா இனி நீ இவர்களோடு கூட போய் பாடு தந்தனா

எனக்கு என்னை பெத்தவங்களை பார்க்கனும் என்றாள் வந்தனா, அவள் விருப்பத்தை நிறைவேற்ற அழைத்துக்கொண்டு போனார்கள்

தந்தையின் பிணத்தை மட்டுமே காண கிடைத்தது நமக்கு சொல்லவே இல்லை என்று வருந்தினார் சந்திரனின் அப்பா

பிறந்தது இரண்டே பொண்ணு ஒருத்தி குழந்தையா இருக்கும் போதே காணாமல் போயிட்டா இருக்கிறவளுக்கு இருதய நோய் டாக்டர் அவளுக்கு நாள் குறிப்பிட்டு விட்டார் வேறு யாருக்கும் நீங்க இருப்பதே தெரியாது அப்படியிருக்க வேறு யார் சேதி சொல்லுவாங்க என்றார்கள் அங்கிருந்தவர்கள்

சில நாளில் அக்காவும் விடைபெற்று விட்டாள் வீடு வாசல் நிலபலன் யாவும் வந்தனாவைச் சேர்ந்தது அதிலிருந்து

இது நாள்வரை தனது அக்காவை பாது காத்துக் கொண்டிருந்து வந்த பெண்ணுக்கும் கல்யாணம் செய்து வைத்தாள், கொஞ்சம் காப்பகத்திற்கு நான் குடியிருந்த கோயில் என்று உதவினாள்

உடனே கல்யாணம் ஏற்பாடு தான்
°°°°°°°°°

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (7-Apr-19, 10:24 am)
பார்வை : 412

மேலே