கேள்வியானதே காதல்

சந்திரனைப்போல் ஒளி முகத்தாள்
ஒயிலாய் எழிலாய் மயிலாய் ஆடிவந்தாள்
அப்படியே என் மனதில் புகுந்துவிட்டாள்
என் காதலியாய்.... இப்படி நான் நினைத்திருக்க
கிட்ட வந்த அவள் புன்சிரிப்பு தந்து
என்னைப் பார்த்து சொன்னாள், ' உன்னிடம்
காதல் கொள்ள வந்தவள் என்று மட்டும்
எண்ணிவிடாதே, நீ விரும்பினால் நானும்
நீயும் நண்பராகலாம் நட்புறவாடலாம் ' என்றாளே
அதைக்கேட்டு இஞ்சித்தின்ன குரங்கானதே என் முகம்
ஒன்றும் புரியாது, ........ அவளோ மீண்டும் ஒரு
பார்வையும் புன்முறுவலும் தந்து அங்கிருந்து சென்றுவிட
ஒன்றும் தெரியாது விழித்தேன் நான்
இன்னும் புரியாது அவள் சொன்ன நட்பு யாதென்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Apr-19, 5:13 pm)
பார்வை : 115

மேலே