ஏ… மழையே எங்குச் சென்றாய்
நீ இன்றி வாடுது எந்நாடு
எதில் மறைந்துக் கொண்டாய் கூண்டோடு
மணலும் அனலால் உருகி நிற்க
தணிக்க புனலே வருவாயோ
உனக்கு இணையாய் பனிக்கூட
தினமும் உனைப்போல் இங்கு பொழியலாச்சு
பிணக்கால் நீயும் பிறழாதே
பிணியால் யாவரும் மாள்வாரே.
--- நன்னாடன்