எல்லையில்லாச் சினங்கொண்டு

எறும்பென்று எங்களை ஏளனிக்காதே
இரும்பையும் உருக்கும் ஆற்றல் எமக்குள் உண்டு

கரும்பானாலும் கசக்கும் மருந்தானாலும்
விருந்தென உண்டு மகிழ்வோம்

உண்டு உண்டு கொழுப்பால் கொழுத்தல்
எம் குலத்திற்கேக் கிடையாது

பருக்கை உணவானாலும் பலர்கூடி உழைத்து
பங்கிட்டேப் படிப்படியாய் உண்ணுவோம்

எம் இல்லத்திற்கு எவ்வித இடர் வரினும்
எல்லையில்லாச் சினங்கொண்டுக் கடிப்போம்

உழைப்பையே ஓயாமல் நாங்கள் செய்வதால்
ஊனமுற்ற குழவி பிறத்தல் இல்லை.
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Apr-19, 6:42 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 682

மேலே