உணவு
ஒரு
கவிஞனின்
காதுகளுக்கு
உணவாக நீர்
தரவேண்டியது
உங்கள் கைத் தட்டு
தூக்கி எறியப்பட்ட
உணவின்
அறியாசனம்
பிச்சைக்காரன் தட்டு
அந்த
அறியாசனத்தில்
உணவை அமர வைக்காது
குப்பையில்
வீசும் மக்கள்
உணவின் மகத்துவத்தை
அறியா ஜனம்
பாவம் செய்வோருக்கு
வைக்காது
பாவம்
நல்லது செய்யும்
காய்க்குப் பெயர்
பாவக்காய்
உப்பு என்பதாலோ
என்னவோ
உண்டால் உப்புகிறோம்
சிறையில்
இருப்பவன்கூட
களி உண்கிறான்
தரையில் இருக்கும்
நம் விவசாயி
எலி அல்லவா
உண்கிறான்
உணவை
உடலுக்கு அழைக்கும்
அழைப்பிதழ்
பசி
பசி வற்றாது
ஊற்றெடுக்கும்
கிணறு
ஏழையின்
வயிறு
நாம் உண்டால் அது புளி
நம்மை உண்டால் அது புலி
பசித்தால்
வேண்டும்
போண்டா டீ
அதை
நேரத்தோடு
செய்து தந்தால்
அவளே
நல்ல பொண்டாட்டி
அன்று
உணவே மருந்து
இன்று மருந்துதான்
பலருக்கு
உணவு
உணவு தீர்க்காத
பசியை
ஏழையின்
உறக்கத்தில்
கனவு எனும்
உணர்வு
தீர்த்துவைக்கிறது
காவேரி
அணையும்
ஏழை வயிறும்
ஒன்றுதான்
இரண்டும்
என்றுமே
நிறைவதில்லை