இன்னுமொரு வருத்தம் இன்னுமொரு மன்னிப்பு இன்னுமொரு வெட்கக்கேடு
ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு இன்று.
இன்னுமொரு வருத்தம்! இன்னுமொரு மன்னிப்பு! இன்னுமொரு வெட்கக்கேடு
ஏன் செய்கின்றோம்
என்று தெரிந்தே
செய்த ஏகாதிபத்திய
கொடுங்கோன்மைக்கு
ஏன் சொல்லவேண்டும்
வருத்தம், மன்னிப்புக்கூட அல்ல
வருத்தம்தான்.
ஏன் தெரிவிக்கவேண்டும்?
என கேட்கும்
வெள்ளை பொய்ச்சொல்லும்
வெள்ளை இனமே!
எமைக் கேட்டா வந்தீர்கள்
எங்கள் நாட்டிற்கு.
எவன் தந்தான்
கடவுச்சீட்டு?
கழவுத்தொழில்தானே
கனககச்சிதமாக
செய்ய வந்தீர்கள்.
எத்துனை வருத்தங்கள்?
எத்துனை மன்னிப்புகள்?
அந்த ஜாலியன்வாலாபாத்திலே
ஆறுநூறாய் மடிந்த
ஆருயிர்கள் சொல்லும்.
'வருத்தம்' ஓன்று
வருவதற்கே
வருடம் ஒரு நூறுவென்றால்,
எங்களை சிதறடித்து
சீரழித்து நன்றாய்
நாகரிகம் என்றே செய்த
பல நூறு செயல்கட்கு
யார் பொருப்பு?
யாருக்கு வேண்டுமிந்த
வருத்தம்
வேண்டா வெறுப்பாய்
ஒரு மன்னிப்பு.
ஆஸ்திரேலிய பழங்குடிகளை
நாகரிகப்படுத்துகிறோமென்றே
அழித்தொழித்து
இனம் ஒழிந்த பிறகு
உலகம் உமிழ்ந்து கேட்டபோது
'தானாக முன்வந்து'
ஒரு மன்னிப்பு.
உங்கள் கடவுள் கூட
உங்களை மன்னிக்க மாட்டானடா!
உரம்கொண்ட எங்கள்
ஆப்பிரிக்கனை
அடியோடு
அடிமையாக்கி
இருநூற்றாண்டு
சுரண்டல் சூறையாடிய
வெள்ளை முதலாளித்துவம்தானே
எங்கள் கருப்பின வருமைக்கு மூலம்.
எங்கள் உழைக்கும் மனிதர்கள்
எங்கள் நாட்டிலிருந்து
திருடப்பட்டதுதானே
எங்களை ஏழையாக்கியது.
அன்று செய்த
தெரிந்தே செய்த
வேண்டுமென்றே செய்த
கொடுமைக்கு
அன்றே
தண்டனை
அடித்து கொடுத்திருந்தால்
இன்று வேண்டாம் இந்த
வேண்டாவிருப்பான
வருத்தம்.
இன்றும் இருக்கிறார்கள்
இந்த செய்வதை செய்துவிட்டு
வருத்தம் தெரிவிக்கக் கூட
'வருந்துகின்ற' வருந்தாமல் 'வருந்துகின்ற'
'வெள்ளை' மனிதர்கள்.
'எல்லா குடியேரிகளும் வெளியேர வேண்டும்'
என்றே நூறு வருடங்கள்
முன்னே வந்த குடியேரி
சட்டமாக சொல்கின்றான்
கேட்டால்?
இதுதான்
உண்மை மீறிய (Post Truth)காலமாம்.
உண்மை மறைந்த (Beyond Truth) காலமோ?
இவனும் சிலகாலம் கழித்தது
வருத்தம் தெரிவிப்பான்.
அதுவும் உலகமே வேண்டி கேட்டபின்.
செய்யும்போதே
அடித்து கேட்காத உலகத்திற்கு
வருத்தம்
காலம்கடந்த
வருத்தம் தான்
வழிநடாத்தும்.