சிரிப்பின் சிறப்பு

சிரிப்பின் சிறப்பு

சிரிப்பு. . சிரிப்பு. . சிரிப்பு . ..
இது மனிதகுலத்திற்கு கிடைத்த
முத்தான தனி சிறப்பு
புன்னகைதனை இழந்தால்
முகம் பொலிவது இழந்திடுமே
அங்கமெல்லாம் தங்கம் ஜொலித்தாலும்
அங்கே புன்னைகை இல்லையேல்
பொன் நகையும் மதிப்பிழக்குமே!
அறுசுவை உணவுக்குத்தேவை
உப்பு துவர்ப்பு கார்ப்பு
கசப்பு இனிப்பு புளிப்பு
நகைச்சுவை அறியாதவர்க்கு
நானிலத்தில் ஏது சிறப்பு?
புன்னகை பூ - நமது
உடன் பிறப்பு - மணம் தரும்
மல்லிகை பூ
மயக்கும் குணம்கொண்டது
இந்த மாசிலா சிறுநகை வெண்பூ
மழலையின் சிரிப்பு
மனத்திற்கு சுகம்தரும் பூரிப்பு
சில அங்கையர் சிரிப்பு - அது
ஆடவர்க்கு வலை விரிக்கும் புதிர்ப்பூ
சிரிக்க வைக்க தெரிந்தவன்
சிந்திக்க வைக்கவும் செய்கிறான்
சிறப்பான சிரிப்பினால் . ..
சிரித்து மகிழ்வோம் - பின்
சிந்தித்து பயன் பெறுவோம் !
மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (13-Apr-19, 3:11 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : sirippin sirappu
பார்வை : 89

மேலே