மூங்கையானேன்
மூங்கையானேன்
கண்ணியவளை கண்டேன்
காதலதை கொண்டேன்
நாணல் அவளை கண்டேன்
நாணம் கொள்ள கண்டேன்
எண்ணம் அதை எண்ணுகையில்
என்னவளும் மறைந்தாளே
எழுதினேன் கடிதம்
அனுப்பினேன் தூது
முகவரியும் மாறிடவே - நான்
மூங்கையாய் ஆனேனே !
மு. ஏழுமலை