நம் கடமை
நம் கடமை
சுதந்திரம் நமது பிறப்புரிமை
தாயகம் காப்பது நம் கடமை
இல்லை இல்லை நாமடிமை
அடிமையாய் வாழ்வதுதான் கொடுமை
புறப்படு புறப்படு நண்பா
புரட்சிகள் செய்தால் வம்பா .. . .?
உழவிற்கிங்கே உயிர் கொடுப்போம்
உலகுக்கு நாமே உயிர் கொடுப்போம்
உழவனை மனிதனாய் மதித்திடுவோம்
உயிருள்ளவரை நாம் போற்றிடுவோம்
துணிந்திடு துணிந்திடு நீயும்
கனிந்திடும் கனிந்திடும் காயும்
விடுதலை பெறவே தலை கொடுத்தோர்
எத்தனை பேர் என்று சொல்வாயோ
உலகினை புதிதாய் மாற்றிடவே
இளைஞனே கதிராய் எழுவாயோ
எரிந்திடு எரிந்திடு எரிமலையாய்
ஒளிர்ந்திடு ஒளிர்ந்திடு ஒளியாய்
விடியும் விடியும் என்றிருந்தால்
விடியலிங்கே ஏதடா - சுணங்கி
சுணங்கி நீ கிடந்தாள் - உன்
சுகங்களும் கொள்ளை போகுமடா
புனிதர்கள் வாழ்ந்த நாட்டினிலே
மனிதரைக்கூட காணலியே
மனிதமும் இங்கே இல்லையே
நல்ல மண்ணும் கூட மணக்களையே
விருட்டென விருட்டென வாடா
இருட்டினை போக்கிட கரம் தாடா!
மு. ஏழுமலை
9789913933