வேண்டாம் நெகிழி நெகிழி குறித்து விழிப்புணர்வு பாடல்
வேண்டாம் நெகிழி [ நெகிழி குறித்து விழிப்புணர்வு பாடல் ]
ஆண்: காணலயே காணலயே
பாத்திங்களா
யாராச்சும் பாத்திங்களா
தொலைச்சிப்புட்டு தேடுறேன்
கெடைக்கமா வாடுறேன் பாத்திங்களா
யாராச்சும் பாத்திங்களா
கண்டுபுடிச்சா கொடுத்துடுங்க - என்
கண்ணீரத்தான் தொடச்சிடுங்க
பெண்: என்னத்தையா தொலச்ச
எங்கதான்யா தொலச்ச
ஆண்: பொசக்கெட்ட பொம்பள
சொல்லுறேன்கேளு காதுல
சொகுசுக்காக ஆசைப்பட்டேன்
பவுச பாத்து ஏமாந்துட்டேன்
சொக்கத்தங்கம் என் உசுர - நான்
சுக்குநூறா செதச்சுப்புட்டேன்
பெண்: ஒண்ணுமே புரியலையே
என்னானு தெரியலையே
ஒளறாம சொல்லிப்புடு ராசா
ஆண்: நாகரிக சோக்குள்ள நல்லதா நான் பாக்கல
மினுமினுப்பு பாத்துபுட்டு
மேனியத்தான் தொட்டுப்புட்டேன்
தொட்டதால வந்த வென
விடலயே இன்னும் என்ன
பெண்: ஓகோ. . . கத அப்படி போகுதா
எவ அவ எனக்கு போட்டியா வந்திருக்கா
ஆண்: பொண்ணுயில்ல தாயி அவ பொண்ணுயில்ல
நம்ம மண்ணழிக்க வந்திருக்கா ஊருக்குள்ள
அழகான பேருல நெகியாத்தான் வந்தவ
நெலைகுலைய வைக்கிறாளே - நம்ம
நெலத்தயெல்லாம் வீணடிக்கிறாளே
பெண்: நெகிழியா அது என்னையா
ஆண் : அதான் புள்ள பிளாஸ்டிக்கு
புள்ள உங்கிட்டேன் ஒன்னு கேக்குறேன்
சொல்லுறியா புள்ள
பெண்: யோ . . எசுக்கு பிசுக்கா கேட்டுப்புடாதையா
ஆண்: அது ஒண்ணுமில்ல .... சரி
நேராவே சேதிக்கு வாரேன்
மஞ்சா பையி துணி பையி
தெரியுமாப்புள்ள உனக்கு
பெண்: அட என்னய்யா இப்படி கேட்டுபுட்டா
ஊரே சொல்லுமே அதப்பத்தி
அரிசிவாங்க மஞ்சா பையி
சந்தைக்கு ஒரு சாக்கு பையி
குளிருக்கு ஒரு கோணிப்பையி - மச்சான்
பள்ளிக்கூடம் போறதுக்கும்
வேண்டுமே அந்த மஞ்சா பையி
நம்மோடுதான் இருந்துச்சி
நலத்ததான் கொடுத்துச்சி
பொம்பளைக்கும் நூல் துணிதான் ஒதவுச்சு
ஆண் : ஓகோ .. அது அப்போ .. இப்போ
குழந்தைக்குதான் பேம்பரு
குமரிக்குத்தான் விஸ்பரூ
ஸ்டே பிரியும் வந்துருச்சு
சேதாரத்தா தந்துடுச்சு
பெண்: அய்யயோ அப்புறம்
ஆண்: கல்யாண வீடுமுதல் கருமாதி
வீடுவரை பந்தியெல்லாம்
பிளாஸ்டிக்கா ஆனது - நம்மள
பீசு பீசாதானே அது கிழிக்குது
வாழையிலை மாறிப்போச்சு கம்ப்யூட்டர் எலயாச்சு
என் கண்ணாட்டி - நம்ம
சந்ததிகள காக்கவேணும் என் கண்ணாட்டி
பெண்: அதுக்கு என்னய்யா பன்றது
ஆண்: நூளாலான அந்த சேலை
நாளானாலும் ஒழைக்குமாடி
தாளாரமா உடுத்தலாமடி என் கண்ணாட்டி
சேதாரம் ஏதும் இல்லடி என் கண்ணாட்டி
மீண்டும் மஞ்சா பைய தூக்கவேணும்
மக்க உசுர காக்க வேணும் - அதுக்கு
பிளாஸ்டிக்கத்தான் ஒழிக்க வேணும்டி
மன்னுசரு காக்க வேணும்டி என் கண்ணாட்டி
மன்னுசரு காக்க வேணும்டி
விழித்துக்கொள்வோம் ,
மு. ஏழுமலை.
.