நீ மட்டுமே தோழியாக வேண்டும்.........

தொடரும் நாட்களெல்லாம்
நீ மட்டுமே தோழியாக
தொடர வேண்டும் என் வாழ்வில்...

பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும்
பறிகொடுத்த இன்பங்களாகட்டும்
அத்தனையும் பகிர்ந்துகொண்ட
நீயும், நானும் இனிவரும் நாட்களிலா
பிரிந்து விடப்போகிறோம்.

தொடரும் நம் நட்பில்
தோற்க்காதிருக்கட்டும் என்றும் அன்பு.

எத்தனையோ நாட்கள்
நம் நட்பில் கரைந்து
நன்றாய் வாழ்ந்த்திருந்தாலும்,
இன்று உன் குடும்பம்,
என் குடும்பம் என்று
இருவேறு தீவுகள் ஆகிவிட்டோம்.

இருந்தும் தொலைபேசி வழியாக
இருவரும் தொலைந்துகொண்டுதான் இருக்கிறோம். இன்றுவரை நம் நட்பில்.....

எழுதியவர் : வென்றான் (3-Sep-11, 2:13 pm)
பார்வை : 1019

மேலே