என் குருதியோடு கலந்து விட்ட ஒருவன்...........


கண்ணுக்கு சுகமாக
இருந்த அவன் இப்போது
கண்களை உருத்திக்கொண்டிருக்கிறான்
கண்ணீராக,

உலகம் அறியாத எனக்கு
உலகத்தையும் வாழ்க்கையையும்
கற்று கொடுத்தவன்
நட்ப்பு எனும் வட்டத்துக்குள்,

அவனோடு சாய்ந்து போன
என் மனதை தட்டி எழுப்ப
முடியவில்லை
அவன் நினைவாகவே
செயல் இழந்து கிடக்கிறது,

அவன் வெகுளியான அன்பும்
பொய் கோபமும்
முட்டி,மோதி மறக்க நினைத்தாலும்
மயக்கம் தெளிந்து எழும் போது
என்னோடு சேர்ந்து அவனது நினைவுகளும்
எழுந்து கொள்கிறது மறுபடியும்,

காக்கை இறகுகளை
ஓன்று சேர்த்து மயிலிறகாக
அவன் செய்து கொடுத்தவை
இன்றும் அவன் நினைவுகளுக்கு
இதமாக மருந்து போடுகிறது,

தூக்கம் கலைந்து விழிக்கையில்
ஜன்னலோடு கன்னம் சேர்த்து
விழிகளை தூது அனுப்பி பயனின்றி
என்னிடமே வந்து சேரும்
அவன் நினைவுகளுக்கு ஆறுதல் சொல்வது
என் பேனாவும் ,டயரியும் மட்டுமே,

என் குருதியோடு கலந்து விட்ட
அவன் நட்ப்பையும்,அவனையும் இன்றும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
கல்லூரி வாழ்க்கையில்
சிறகொடிந்த பறவையாக...............

எழுதியவர் : நந்தி (3-Sep-11, 2:03 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 410

மேலே