உன்னை மட்டுமே என் மனம் நினைக்கும்

மனம் விட்டு பேசடி
மனத்தால் பேசடி
கண்ணால் பேசியே
மனம் கலவரம் ஆனதடி

கலவரமே குதூகலமாய்
மனம் இன்னும் வேண்டுதடி
இன்னும் ஆசை தூண்டுதடி

எந்த நிழலும் நிஜமில்லை - அது
உனக்கேன் புரியவில்லை
மௌனமாய் சொல்லிடும்
வார்த்தைக்கு உருவம் என்றும் இல்லை

பருவம் பயம் கொடுக்கும்
மனம் பதுங்கிட தினம் நினைக்கும்
உருகிட பரிதவிக்கும்
உன்னை மட்டுமே என் மனம் நினைக்கும்
மனம் நினைக்கும் ....

எழுதியவர் : ருத்ரன் (14-Apr-19, 9:02 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 712

மேலே