என் தவறுகள்

தினந்தோறும் என்னை
நலம் விசாரித்து செல்கிறார்கள்
எனது தவறுகள்

தினத்தவணையாக
என் வருதங்களை வழிபறி செய்கிறார்கள்
கையோடு
அன்றைய தவறுகளையும்
அதன் அடியாட்களென நியமிக்கின்றார்கள்

கொள்கை தவராதவர்கள்
இந்த குழந்தை தவறுகள்

இமை மூடும்போதெல்லாம்
இவர்களுக்கு காற்றோட்டம் இல்லையோ
என்னவோ
விழிகள் முன் வந்து
என் இமைகள் பிரித்து
அன்றைய உறக்கம் கலைக்கும்
அன்புத்தவறுகள்

நான் உட்கொள்ளும் எந்த உணவுகளும்
இவர்களுக்கு பிடிப்பதில்லை போலும்
தொண்டை குழியினுள்
தொடர்கின்றன போர் காலங்கள்

அவர்களுக்கு பொழுது போகாதபோது
என்றோ செத்த நினைவுகளை
சேமித்து வைத்து
செவிகளுக்குள் ஓலமிடுவார்

இவற்றை எண்ணும் போதெல்லாம்
அணுவுலைகள் பல
மூளைக்குள் கொப்பளிக்கும்

மொத்தத்தில் இவர்களுக்கு வேண்டுவதெல்லாம்
நான் மூலையில் முடங்கியிருக்க
பழைய நினைவுகளோடு
சிறு சிறு குழு பிரித்து
சிந்தனையில் கபடி ஆடவேண்டும்

இடைவிடாது என்னையும் விடாது
அரக்கர்கள் என் தவறுகள்

எழுதியவர் : (15-Apr-19, 2:44 pm)
சேர்த்தது : விஜயலாய சோழன்
Tanglish : en thavarukal
பார்வை : 60

மேலே