காதல் காற்று

நீர்வாளம் மனப்பறவை
திரிந்து
காவியப் பருந்தாய் பார்த்தது !

கண்ணியக் குழந்தை கார்மேக
குழலியாய்
உருவானது உன் ஒற்றை பார்வையால் !

துயில் மாந்தம்
தூவானம் கைப்பற்றி
மாம்பழ கவிதையாய் ஓர் ஆட்சி
அவள் விழியில் !

தேனிசைக்கும் குயில்கள்
கரை பாதம்
தொழுதல் கண்டேன்
அநுதினமும்!

ஊக்கம் என்னும் உயிர்மூச்சு
ஊதாங்குழலாய்
அவள் வார்த்தைகளால் பறக்கிறது !

ஆணின் முதுகை பொறாமை
கொள்ள வைக்கும்
வைகறை அழகு !

காந்தக் கடிவாளம்
உந்தன் கண்ணில் பூண்டு
மனம் மயக்குகிறாய் !

புதைமணல் தோற்கும்
உந்தன் கண்ணழகின்
ஒற்றை துளி இடத்திற்கு !

தோல் நூல்களை புரட்டிப்
பார்த்தாயிற்று
உன் அழகினை விவரிதாரில்லை !

மயில் இறகு கண்பறிக்கும்
பனிமலை மனம் பறிக்கும்
உந்தன் பணிசிறகு கன்னங்கள்
என் மனதை பறித்தன !

மைகோல்கள் மறுக்கும் முற்றுப்புள்ளியை ! உன்னால்
சொற்கள் மறுக்கும் தலை நிமிர ! உன்னால்
பூக்கள் மறுக்கும் தோழி ! உன்னால்

- நீ என்னும் கூற்றின் பேரிழையில்

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்கார (16-Apr-19, 8:14 am)
Tanglish : kaadhal kaatru
பார்வை : 410

மேலே