காதல்

மலர்ந்த தாமரையின் வடிவழகு
கண்டேனே நான் அவள் முகத்தில்
கண்டேன் அதன் சிவப்பும் அங்கே
கண்டேன் தடாகத்தில் பூத்த வெண் தாமரை
அதன் வெண்மையைக் கண்டேன் நான்
அவள் திறந்த உள்ளத்தில் புன்சிரிப்பில்
பூத்து குலுங்கும் முல்லைப்பூக்கள் கண்டேன்
அவள் செவ்விதழைகளூடே உதிர்ந்த
களங்கமில்லா சிரிப்பில்கண்டேன்
மணக்கும் சிவப்பூ ரோசா பூக்கள் கண்டேன்
என்மீது அவள் கொண்ட காதல்
அதில் கண்டேன் அதன் வாசத்தில்
இவள் சுவாசம் கண்டேன் உணர்ந்தேன்
கொடியில் பூத்துகுங்கும் மல்லிகைப்பூ
பூவில் இவள் மென்மையைக்கண்டேன்
பூவெல்லாம் மங்கை அவள் பூவை அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Apr-19, 9:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 250

மேலே