இனியும் வேண்டாம் மதம் ++++++++++++++++++++++

இனியும் வேண்டாம் மதம்
++++++++++++++++++++++
பயங்கரவாத தாக்குதலில் இறந்த
இலங்கை (தாயக)மக்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி
---------------------------------------------------
இரத்தம் சிந்தியா மனிதர்களை பார்த்து
தேகம் எல்லாம் வெந்து போகிறதே
உறவுகளின் கதறல் கேட்டு
நிமிடங்களும் ரணமாக்கி போகிறதே
மானுடன் வாழ மதத்தை படைத்து
மதத்தின் பெயரிலே மனிதத்தை அழிக்கிறான்
மனிதனை மனிதன் வென்றுவிட வெனவே
உயிர்களை பறித்து திருப்தி அடைகிறான்
மானிட இனியும் வேண்டாம் மதம்
மனிதம் வளர்த்து கண்ணீரை துடை
நாடு வளர்ந்து வளம் உதிக்கவே
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (22-Apr-19, 11:20 am)
பார்வை : 84

மேலே