கடந்த கால கடமை யாவும்

கடன் பெற்றேன் கடன் அடைக்க
கடந்த கால கடனுக்கும்
கடக்க வேண்டிய காலத்திற்கும்
கடமை செய்து வாழ வேண்டி

கட கடவென கடக்கும் காலம்
கடனே எனக் காத்திருக்க
கடந்த கால கடமை யாவும்
கடன் இல்லாமல் முடிந்ததையா

கடந்து கடந்து செல்லுந்தோறும்
கடனும் நம்மின் காலைப் பற்ற
கடனில்லாமல் வாழ்தல் கூட
நவீன கலையாய் மாறியதையா
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (22-Apr-19, 9:41 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 554

மேலே