நீ உரைத்த சொல்லின் கோர்வை

வள்ளுவனே வனப்பு மிக்க சொல்லினனே
நின் சொல்லால் இவ்வுலகை நிமிர்த்தினாயே
நிலை விளங்கி நேர்படவும் நன்னெறி வாழ்வடையவும்
பன்னீர் போன்ற வார்த்தையால் பரப்புரைத்தாயே.

நீ உரைத்த சொல்லின் கோர்வை
எம் புலனை நன் சிதைத்து உண்மை கண்டது போல்
இவ்வுலக உயிர்களின் பால் நனி பாசம் கொண்டது
தமிழ் அறிந்த மாந்தார் தோறும் சால நேசம் பெற்றது

நெய்யின்றி எரிகிறதே நீ வைத்த குறள் எனும் திரி
நையென்று வாழ்வோரும் நெறிபெறுவார் குறளின் படி
குறளென்னும் தருவை வைத்தாய்
தீந்தமிழில் உள்ள வார்த்தை கொழுந்தின் படி

புனல் அனலில் புகுந்து உன் படைப்பு புதுபிறவி எடுக்க
புகழ் என்னும் பெருமகுடம் உன் பாதம் பணிய
புது இலக்கணம் படைத்தாயே புவி வாழ்வு செழிக்க
பூமி எங்கும் ஒலிக்குதே உன் புண்ணிய பெயர் நிலைத்து .
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (22-Apr-19, 11:39 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 228

மேலே