பூச்சியா
உன்கூட நான் வந்தா உங்க வீட்டில ஒண்ணும் சொல்லமாட்டாங்களா?
@@@@@
எங்க குடும்பத்திலிருக்கிறவங்க பரந்த மனப்பான்மை கொண்டவங்க. ஒரு ஆணும் பொண்ணும் தவறாப் பழகினாத்தான் தப்பா நெனைப்பாங்க. உள்ளத்தூய்மையோட சகோதரன் சகோதரியாப் பழகிறதத் தப்ப நெனைக்கமாட்டாங்க. நீ மட்டுமல்ல நம்ம வகுப்பில இருந்தும் நம்ம கல்லூரில படிக்கிற எந் தங்கச்சியோட வகுப்புத் தோழிகள் தோழர்கள்கூட அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாங்க. எங்க பாட்டி அவுங்ககிட்ட நகைச்சுவை உணர்வோட பழகுவாங்க. நீ வந்து பாரேன்.
@@@@@
( இருவரும் வீட்டில் நுழைந்ததும் பாட்டி வரவேற்கிறார்)
வாடா அன்பழகா. முத்தழகி வந்து ஒரு மணி நேரம் ஆகுது. நீயேன்டா தாமதமா வர்ற? வாம்மா பொண்ணு. நீ ரொம்ப அழகா இருக்கிற. அன்பழகன் வகுப்பில படிக்கிறவதானே.
@@@@
ஆமாங்க பாட்டி.
@@@@
உம் பேரு என்னடா கண்ணு?
@@@@@
எம் பேரு பூஜ்யா பாட்டிம்மா
@@@@
பூச்சியா? அழகா இருக்கிற உனக்குப் போயி 'பூச்சியா'ன்னு பேரு வச்சிருக்கறாங்களே.
@@@@
பூச்சியா இல்லங்க பாட்டிம்மா. பூஜ்யா.
@@@@
நானும் அதத்தாண்டி சொன்னேன்.
Pujya = respectable.