மூன்று தங்க நாணயங்கள்

மகாதேவன் ஒரு அனுபவம் வாய்ந்த தோல் பொருள் ஆராய்ச்சியாளர். (Archeologist)
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான எகிப்தில் உள்ள பிரமிட்டுகள் இருக்கும் கீசா பல்லத்தாக்கில் சுமார் 4000 ஆண்டுகள் பழமையுள்ள பிரமிட்டுகள் இரண்டை கண்டுபிடித்தவர்களுள் மகாதேவனும் ஒருவர். அங்கு உள்ள மிகவும் பழமை உள்ள மன்னர்களின் கல்லறைகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஒரு மன்னரின் கல்லறையைக் கண்டுபிடித்து ஊர் திரும்பினார் மகாதேவன்.
ஊட்டியில் மூன்று அறைகள் கொண்டது அவரின் வீடு . மகாதேவனுக்கும் அவரின் மனைவி சித்திராவுக்கும் வாசுகி ஒரு மகள் . எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி (Emerald Heights Womens College_ஊட்டியில் ப்ளிஸ் டூ வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள். தந்தையைப் போல் தானும் தோல் பொருள் துறையில் படித்து பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற வேண்டும் என்பது அவளின் நோக்கம்

மகாதேவனின் மனைவி சித்திரா ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை . மகாதேவனின் அண்ணன் மகாதேவன் கத்தோலிக்க மதத்துக்கு மதம் மாறிய கத்தோலிக்க பாதிரியார். இமானுவேல் சகாதேவன் என்ற பெயரில் ஒரு சேர்ச்சில் போதகராக இருப்பவர் .

அமைதியாக இருந்த மகாதேவன் வீட்டில் எகிப்தில் இருந்து தான் கண்டு பிடித்த சில புதை பொருட்களோடு எகிப்து அரசின் அனுமதியோடு மூன்று தொன்மை வாய்ந்த தங்க நாணயங்களோடு வீடு திரும்பிய பின் புயல் தோன்றியது .

பிரமிட்டின் இடிபாடுகள் உள்ள இடம் நைல் நதிக்கு மேற்கே இருக்கும் சக்கார என்ற இடம். இது கெய்ரோவில் இருந்து தெற்கே முப்பது கி மீ தூரத்தில், முன்னைய மன்னர்களின் பதப் படுத்தப் பட்ட கல்லறைகள் இருக்கும் இடம். இந்த இடத்தில் தான் மாகாதேவன்
எகிப்திய அரசின் அழைப்பை ஏற்று கி மு 2345 முதல் 2333 வரை 12 வருடங்கள் ஆண்ட டெடி என்ற பரொவாவை பற்றி தொல் பொருள் ஆராய்ச்சி செய்து விபரம் அறிய சென்றிருந்தார். “டெடி” என்ற மன்னரின் தாயார் ராணி செஷெஷ் ஆவார். இவர் அரச குடும்பத்தில் அரச பதவிக்குப் போட்டியிடும் இரண்டு பிரிவுகளுக்கு இடையே சமரசம் செய்து தன் மகன் டெடி யை அரியணை ஏற்ற காரணமாக இருந்தார் . சகராவில் 4,200 வருடங்கள் வயதுடைய 5 மீட்டர் உயரமான பிரமிடுக்குள் டெடியின் உடல் பதப் படுத்த பட்டு இருந்தது அதோடு சில தங்க நாணயங்களும். சித்திரங்களும் . பொருட்களும் இருந்தன. இது எகிப்தில் இதுவரை கண்டறியப்பட்ட 118 வது பிரமிட்டு ஆகும். இது முதலில் 14 மீட்டர்அகலமும் , 22 மீட்டர் நீளம் 5 மீட்டர் உயரமுள்ள ஒரு கட்டிடத்தில் கட்டப்பட்டது.
****
மூன்று தங்கநாணயங்களும் ஒரு அழகிய வெல்வெட் பேட்டியில் வைத்து மற்றைய தொல் பொருட்களோடு அறையில் கண்ணாடி அலுமாரிக்குள் இருந்தது . விலை மதிக்க முடியாத பொருட்களைக் கொண்ட அலமாரியைத் திறப்பதற்கு இரகசிய கடவுச் சொல்(Pass word) உண்டு அது மகாதேவன், சித்திரா, மகள் வாசுகி ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும்
அந்த தங்கநாணயங்களில் சில உருவங்கள் பதிவாகி இருந்தது அதன் விளக்கம் மகாதேவனுக்கு மட்டுமே தெரியும். அந்தக்காலத்தில் எகிப்தில் ஆட்சி செய்த மன்னர்கள் ஆவி வழிபாட்டினை செய்து வந்தனர் மேலும் மறு பிறவி மேல்நம்பிக்கை வைத்திருந்தார்கள் . இறந்த பின்னரும் தாம் உயிர் வாழத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை தம் கல்லறையில் தமது பதன் படுத்தப் பட்ட உடலுக்கு அருகே வைத்திருந்தனர்,

“அப்பா நீங்கள் எகிப்தில் இருந்து கொண்டு வந்த மூன்று தங்க நாணயங்களை நான் எடுத்துப் பார்க்கலாமா.”?: வாசுகி கேட்டாள்.

“தாராலமாக நீ பார்க்கலாம். அந்த நாணயங்கள் விலை மதிக்க முடியாத 4000 ஆண்டுகள் வயதுடையவை . ஆகவே அவைகளைப் பார்த்து விட்டு இருந்த இடத்தில் வைத்து விடு” மகளின் வேண்டுகோளினை மகாதேவன் ஏற்றுக் கொண்டார்

கடவுச் சொல்லைப் பாவித்து, அலமாரியைத் திறந்து, மூன்று நாணயங்களை வாசுகி கையில் எடுத்து ரசித்துப் பார்த்தபோது எதோ ஒரு வித மின் அதிர்ச்சி போன்ற உணர்வு அவளின் உடலுக்குள் புகுந்ததை அவளால் உணர முடிந்தது. மூன்று நாணயங்களை செல்பியில் படம் எடுத்தாள் . ஒவ்வொன்றும் வித்தியாசமானது . அவைற்றில் பதிவாகி இருத உருவங்கள் பயங்கரத் தோற்றம் உள்ளவை. வேறுபட்டவை. நாணயத்தில். எழுதி ஒருந் வார்த்தைகளின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை. சில வேளை அக்காலத்தில் பாவித்த மொழியாக இருக்கலாம். அதில் இருந்த எழுத்துக்களில் மூன்று எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் போன்று இருந்தது அவளை அறியாமலே வாசுகி மூன்று நாணயங்களுக்கு முத்தம் கொடுத்தாள். எதோ ஒரு உணர்வு அவளின் உடலுக்குள் புகுந்தாய் உணர முடிந்தது. .
அப்போது வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை . வாசுகி நாணயங்களுக்கு முத்தம் கொடுத்த பின் பயங்கரமாக ஊளையிட்டாள் . அவளின் தலை மயிர்கள் குத்திக் கொண்டு நின்றன . ஏதோ ஒரு ஆவி அவளின் உடலுக்குள் புகுந்தது போல் இருந்தது . அவளை . அறியாமலே கைகளைத் தலையில் வைத்து பேய் நடனம் ஆடத்தொடங்கினாள். கதிரையில் ஏறிக் குதித்தாள். சுவரிலிருந்த முருகன். அம்மன் .சிவன் படங்களை தன் கையால் அடித்து உடைத்து காலுக்குள் போட்டு மிதித்தாள். கெக்கட்டம் போட்டுச் சிரித்தாள். அவளுக்குத் தான் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை . அந்த சமயம் அவளின் தந்தையும் தாயும் வீட்டுக்குள் வந்தனர். மகளின் நிலையைக் கண்டு மகாதேவனுக்கு நடந்தது என்ன வென்ற ஓரளவுக்குத் தெரிந்து விட்டது .அவர் வாசுகியை நாணயங்களை தன்னிடம் தரும் படி கேட்டார் வாசுகி தன் கையில் இருந்த நாணயங்களைத் தந்தைக்குக் கொடுக்க மறுத்து விட்டாள். அந்த நிலையில் மகாதேவனுக்கு வாசுகிக்கு என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார். தன் அறைக்குள் போய் ஒரு போத்தலிலிருந்த மயக்க மருந்தைக் கொண்டு வந்து வாசுகியின் மூக்கருகே பிடித்தார் . சில வினாடிகளில் அவள் கீழே மயங்கி விழுந்தாள். வாசுகியை மகாதேவனும் சித்ராவும் சேர்ந்து தூக்கிக் கொண்டு போய் அவளின் அறையில் இருந்த கட்டிலில் கிடத்தினர்

“என்ன அத்தான் இது என்ன கூத்து வாசுகிக்கு என்ன நடக்கிறது. அப்படியென்ன அந்த நாணயங்களில் இருக்கிறது ”?. சித்திரா அவலுடன் கேட்டாள்.

சித்திரா உனக்கு இதில் உள்ள ரகசியம் புரியாது. இன நாணயங்களில் முன்னைய பரோக்களின் ஆவிகளின் உருவங்கள் பதிவாகி உள்ளது. இதை நான் உனக்கு சொல்லவில்லை வாசுகி அவைகளைப் பார்க்க கேட்ட போது என்னால் கொடுக்காமல் இருக்கவும் முடியவில்லை . இதை நான் வீட்டுக்கு கொண்டுவந்திருக்கக் கூடாது. என் ஆபீஸில் வைத்திருக்க வேண்டும்”: .
“அப்போ வாசுகியை பரோக்களின் ஆவி பீடித்து விட்டதா ? இதைப் போக்க வழியில்லலையா”? :
“தங்க நாணயங்கள் வீட்டில் இருக்கும் மட்டும் முடியாது. அவளுக்கு இந்த நிலை அடிக்கடி வந்து போகும்.
இது எகிப்திய மன்னர் ஒருவரின் ஆவி: நான் என்னிடம் உள்ள தோல் பொருள் ஆராய்ச்சி பற்றிய நூல்களில் இருந்து இதைப் பற்றி வாசித்துக் கண்டுபிடிக்கிறேன்: என்றார் மகாதேவன்
வாசுகி மயங்கிய நிலையில் இருந்த போது அவள் கையில் இறுகப் பற்றிக் கொண்டு இருந்த நாணயங்களை கடும் முயற்ச்சிக்குப் பின் வாங்கி அலுமாரியில் வைத்தார் . வாசுகி நாணயங்களைத் திரும்பவும் எடுக்காமல் இருக்கக் கடவைச் சொல்லை மாற்றினர்.

வாசுகியின் போக்கில் மாற்றம் இல்லை. அடிக்கடி சத்தம் போட்டு கூக்குரல் இடுவாள் . சாப்பிட மறுத்தாள் . அவள் தூங்கவில்லை. வாசுகியை பிடித்த ஆவியை போக்கும் வழியைக் காண நூல்களைப் புரட்டினார்.
ஒரு மனநிலை டாக்டரின் உதவியை நாடினர். அவராலும் வாசுகியிடம் இருந்து ஆவியைத் துரத்த முடியவில்லை . தன் தம்பி இமானுவேல் பாதிரியாரின் உதவியை நாடினர் .அவர் ஒரு சிலுவையைக் கொண்டு வந்த ஜபம் செய்து வாசுகியின் நெற்றியில் வைத்தார். வாசுகி அதை அவரிடம் இருந்து பறித்து எடுத்து வீசி தூர எறிந்தாள். அவர் மேல் குமட்டிக் கொண்டு வந்த சக்தியைத் துப்பினாள். அவர் எதிர்பார்த்திருகவில்லை வாசுகி அப்படிச் செய்வாள் என்று . அவள் கண்களை கழட்டி சத்தம் போட்டுத் தகாத வார்த்தைகளால் கூச்சல் இட்டாள். கட்டிலில் ஏறிக் குதித்தாள் . அவள் வாயில் இருந்து டெடி டெடி என்னைத் தழுவு என்று சொல்லியபடி தன் கைகளை நீட்டினாள்.
மகாதேவனுக்கு உடனே டெடி என்ற பரோவின் ஆவி வாசுகியை ஆட்கொண்டுவிட்டது என்று புரிந்து விட்டது.

மகாதேவன் அறையில் இருந்தமயக்க மருந்தைக் கொண்டு வந்து வாசுகிக்குத் திரும்பவும் கொடுத்தார். சில நிமிடங்களில் வாசுகி தூங்கி விட்டாள்.

மகாதேவனின் கேரள நண்பர் சொல்லியபடி கேரளாவில் உள்ள ஆலத்தூருக்கு வாசுகியை அழைத்துச் சென்று மந்திரித்து கையில் நூல் கட்டி வீடு திருப்பிய போது அவர் எதிர் பார்த்திருக்கவில்லை வீட்டில் இருந்த எல்லா விலை உயர்ந்த தொல் பொருட்களையும் திருடன் அலுமாரியை உடைத்து எடுத்துச் சென்று இருப்பான் அதில் அந்த மூன்று நாணயங்களும் அடங்கும்.

போலீசில் போய் மகாதேவன் தன் வீட்டில் நடந்த களவைப் பற்றி முறைப்பாடு செய்தார் . போலீசுக்கு ஏற்கனவே அன்று இரவு நடந்த வாகனம் விபத்துக்கும் மகாதேவன் வீட்டில் நடந்த களவுக்கும் தொடர்பு இருந்ததைத் தெரியவந்தது. மகாதேவன் வீட்டில் தொல்பொருட்களை களவெடுத்த திருடர்கள் சென்ற வாகனம் மலைப் பதையில் இருந்து கீழே உருண்டு விழுந்து திருடர்கள் மூவரும் இறந்து விட்டார்கள் . வாகனமும் சிதைந்து விட்டது . அதில் இருந்த எல்லா தொல் பொருட்களும் கீழே ஓடும் ஆற்றில் கலந்து விட்டது என்ற விபரத்தை போலீஸ் சொன்னார்கள்.

“அது நடந்ததும் நல்லத்துக்குத் தான் . அந்த நாணயங்கள் வீட்டில் இருந்தால் வாசுகியை பிடித்த ஆவி அவளை விட்டுப் போய் இருந்திருக்காது” என்றாள் சித்திரா.

(யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (25-Apr-19, 11:14 pm)
பார்வை : 466

மேலே