தத்துவம்

இருளாம் மாயையில் தவிக்கும் மானிடருக்கு
அதை விரட்டும் ஒளிதான் உண்மை
சூரியனைச் சுற்றும் சந்திரன் பாதையில்
விழும் வெறும் நிழல்கள் ராகு கேது
எனினும் இவர்கள் தாக்கத்தில் தவிக்கின்றாரே மானிடர்
எதிரே ஒளியாய் சூரியனும் சந்திரனும் இருந்தும்a
ராகு கேது தாக்கம் மாயை என்றால் அதனின்று விடுபட
ஒளியாம் உண்மையை ஈசனை நாடலாமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Apr-19, 4:56 pm)
Tanglish : thaththuvam
பார்வை : 195

மேலே