இயற்கையில் குன்றா சில எழில்கள்
எங்கள் கிராமத்து வீட்டின் புழக்கடையில்
ஒரு வானுயர் மாமரம் , என் கருத்தை
பார்க்கும்போதெல்லாம் கவரும் உன்னத மரம்
என் தந்தை, தந்தைக்கு தந்தை அவர் தந்தை
இவர்கள் அத்தனைப் பேரும் பார்த்து மகிழ்ந்த மரம்
அதன் காயும் கனியும் சுவைத்து மகிழ்ந்த மரம்
என்று என் தந்தை பெருமிதமாய்க் கூற கேட்டு
அதன் கதையை இதோ அதனடியில் ஓர்
மாங்காயின் புளிப்பு சுவையை சுவைத்துக்கொண்டு நான்..
வருடம் தோறும் பங்குனி மாதம் தாண்ட
கண்ணுக்கு இனிய நிறத்தோடு துளிர் இலைகள்
மரமெல்லாம் ........ கூடவே கொத்து கொத்தாய்ப் பூக்கள்
சிறு காய்கள்..... நாளை முத்திய காயாய்ப் பின் பழமாய்
கொட்டி குவிக்கப்போகும் அற்புத பழமரம்........
இந்த மரத்தைக் கண்டு எனக்கு பொறாமை
என் மூதாதையர் பலரையும் கண்ட மரம் இது
அவர்கள் எல்லாம் வந்து மறைந்து பின் இப்போது
மூன்றாம் தலைமுறை பிரதிநிதி நான் ...
இயற்கை அன்னையே ! இது என்ன பாகுபாடு
அந்த மரத்தைப் படைத்ததும் நீ என்னைப் படைத்ததும் நீயே
அந்த மாமரத்திற்கு மட்டும் குலையா இளமையும்
எழிலும் தந்து உயிர் உள்ளவரைப் பூத்துக் குலுங்கும்
இளமையைத் தந்தாய் ! மனிதர் எங்களுக்கு இல்லையே ஏன்?
எங்கள் ஆணவத்தை அடக்க இப்படி மனிதருக்கு
முதுமையும் பிணியும் தந்து தண்டிக்கின்றாயோ ?
வற்றா கடலைப் பார்க்கின்றேன் , அதன்
ஆர்ப்பரிக்கும் அலைகளோடு ....அது
என்றும் இளமைக்கு குன்றாது கடற்கரை
மணலை தழுவி காதல் புரியும்போது
இளமை சிறிதும் குறையாது அன்றுபோல்
இன்றும்..............நானோ ....மனிதன்
நாளை முதுமைத் தாக்க, பிணிகள் தாக்க
கடலை வந்து பார்ப்பதும் கடினமாகிவிடலாமே!
கடலே உன்னைக் கண்டும் எனக்கு பொறாமையே
உன் பொங்கும் எழில் இளமை ....குன்றா
இவற்றைக் கண்டு !