காதல் கணக்கின் கூட்டல் விதியே

காதல் கணக்கின் கூட்டல் விதியே
உன்னை கற்பேனே-உன்

பின்னே நிற்பேனே..
சூத்திரம் ஒன்றை சாதிகளின்றி
உலகில் படைப்பேனே-அதற்கு
உன்பெயர் வைப்பேனே..
உந்தன் அழகில் வானம் மயங்கும்..
புரிந்தால் சரிதானே...
இருவர் இடையில் ஒருவன் நுழைவான்
அவன்பெயர் காதல்தான்...
தினம் தினம் ஓடிவரும் அவள்மனம்
என்னிடமே ஒட்டிக்கொண்டு
மனதிடம் சண்டையிடுமே...
அறிவும் உன்னழகும்
விழியும் சொல்மொழியும்
பூக்கள்போலே மலருதே..
புவியும் நிலவும்
பிறகோளும் வளியுலகும்
உன்னைக்கண்டே உருகுதே..

விரலில் நகம்தான் வளரும்
உடலில் ரோமம் வளரும்
அதுபோல்
மனதில் காதல் வளர்ந்திடுமே...
பூவில் தேனையெடுத்து
உதட்டை செய்தான் பிரம்மன்
இதுதான்
உலகின் முதன்மை அதிசயமே...
நிற்கும் நிலத்தில் நடக்கிறேன் நானே..
இருந்தும் கீழே விழுகிறேன் உன்னாலே..

புல்லாங்குழல் போலே மெல்லிசைத்தரும் நீயே
என் உணர்வினை பரித்தாய்-உந்தன்
உதடினில் ஒழித்தாய்..
எப்படியோ விழகி தூரமாக நின்றேன்
நீரைபோல என்னையும்-நீயும்
வானமாய் இழுத்தாய்...

கால்முளைத்த கவிதையே
உலகழகின் சரிதையே-உன்
அழகிற்கு ஈடுங்கே உண்டோ?
பால்வடியும் கனியே
தேன்வடியும் மலரே-என்
வயதோடு விளையாடும் நினைவே!
சொல் பொழிந்தால்
பெண் உடைந்தால்-மீண்டும்
பழைய நிலையில் வருவதேது?
அன்பாய் நீயும்
பழகும் போதும்-கொஞ்சம்
தூரம் நீயும் விழகவேண்டும்...

எழுதியவர் : H.S.Hameed (25-Apr-19, 4:20 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 94

மேலே