என் பேரழகா

என் கனவுகளும்
உன் கனவுகளும்
இணைந்திட வாழ்த்திடுவோமா?
வாழ்க்கை
என்னும் வெள்ளை பக்கங்களை
உன் காதலெனும் நிறங்களை
வைத்து நிரப்பிடுவாயா?
உன் அன்பெனும் அருவியில் நனைத்திடுவாயா?
நித்தம் உன் புகைப்படத்தோடு
தினங்களை கடத்திட வைப்பாயா?

காதலும் அன்பும் போதுமே...
விரைவில் வந்தெனை
சேர்ந்திடு என் பேரழகா!!!

எழுதியவர் : (26-Apr-19, 7:57 pm)
சேர்த்தது : rathika
பார்வை : 394

மேலே