இந்நாளில் அவன் நாமமே துணை
காட்டுது தீயாய் இன்னல்கள் வந்திட்டாலும்
உள்ளத்தில் 'அவன்' நாமம் நம்பிக்கையுடன்
வைத்து வாயால் அழைத்தால் அன்று
திரௌபதி குரலுக்கு விரைந்துவந்து அவள்
மானம் சபையில் காத்த கண்ணபெருமான்
தப்பாமல் வந்து காப்பான் துணை iruppaan
காற்றோ மழையோ புயலோ தீயோ தீயோரோ
வந்து இன்னல் தருவார் என்று எண்ணி வீணா
இராது 'அவன் ' நாமத்தை ஜெபி மனமே