மனம் கவர்ந்த மந்தி வழிபாடு
அண்ணலே ஆதி மனிதனின் முன்னலே
அவதாரப் பிறப்பாய் காவியத்தில் பின்னலே
கதாயுதம் தாங்கிய ஆற்றலின் துள்ளலே
கூன் நிமிர்ந்து நடந்த உறுதி உள்ளத்தின் ஏந்தலே
இந்திய தரணி எங்கும் கோயில் கொண்ட காந்தலே
மனைவியின்றி வாழ உலகில் வந்த தனித் தோன்றலே
கையும் காலும் ஓர் உருவ நிலையில் செல்லும் உந்தலே
வானாளாவிய உருவத்தில் வழிபடுகின்றர் உனை மாந்தரே
இவ்வுலகில் நீ வாழ்ந்து மறைந்தது உண்மையோ?
---- நன்னாடன்