தூரிகையும் துதிபாடும்
தூரிகையும் துதிபாடும்
கண்ணே.. . கனியமுதே . .
காதல் தேவதையே . ..
உன் கைவளையோசை
என்நெஞ்சில் தந்தது ஆசை
உன் காலடி சத்தம்
தந்தது எனக்கு சந்தம் - உனை
காணத்துடிக்கின்றேன் நித்தம்
கண்களுக்குள் யுத்தம்
உனது நெஞ்சம் எனது தஞ்சம்
தூயவளே. ..
உனை வரைவதென்றால்
ஏன் தூரிகை கூட
துதி பாடுமடி .
மு. ஏழுமலை