மேதின வாழ்த்து கூறிடுவோம்
உண்டு உண்டு உயர்வு உண்டு
உழைக்கும் மக்கள் யாவர்க்கும்
உண்மை பேசி உரியதை செய்தால்
உலகம் சிறக்கும் செம்மையாய்
பாங்காய் என்றும் தொழிலை போற்றி
பண்பாய் உழைக்கும் மானிடமே
பகலும் இரவும் பனியும் மழையும்
பாராமல் உழைத்தால் தினம் சுகமே
அண்டி பிழைக்கும் ஆட்டையும் மாட்டையும்
அன்பாய் வளர்த்தால் அனுதினமே
அகமது செழிக்க சிரமமது பாராது
ஆற்றலாய் உழைத்து நலந்தருமே
மேன்மை பொருந்தி உழைப்போர்கெல்லாம்
மேதின வாழ்த்து கூறிடுவோம்
மேலும் உழைத்து மேல்நிலை அடைய
மீண்டும் மீண்டும் வாழ்த்துரைப்போம்.
---- நன்னாடன்