அதிகமான கோபம்

வேதமது சொல்லும் விவேகமான சொல்லை
பாதையது மாறாமல் பாதுகாத்து நடந்தால்
சோதனைகள் யாவும் சோம்பிப்போய் ஓடும்

அதிகமான கோபம் ஆத்திரமாய் மாறும்
ஆத்திரம் அதனை அளவில்லாமல் கொண்டால்
அனைத்து வித செயலும் அழிவை நோக்கி செல்லும்

மதியதனை நீயும் பிழறாமல் பாரு
மதிக்கெட்டு முன்னால் போனால் - கேடு
பின்னால் வந்து சேரும், பேரும் கெட்டுப் போகும்

பிறரை சிதைத்து நீ உயர்ந்து வந்தால்
சிதைவு உன்னை சிதைக்க சீக்கிரம் வந்து சேரும்
அதை நீ மறக்க வேண்டாம் அதுவே உலக நியதி
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (30-Apr-19, 5:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : athikamaana kopam
பார்வை : 3515

மேலே