பொய்மை விட்டே விலகிடு
பொய்மையை விலகிடு,
கண்ணில் மை வைக்கும் பொய்மையை விலகிடு,
பொய்மையே விலகிடு.
உம் மனசுக்கும் எம் மனசுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது,
பொய்மையே உனக்கு! எவ்வளவு சம்பாதித்து போட்டாலும் பத்தாது.
கண்ணை சிமிட்டி மயக்குவாய்,
மயங்கி விட்டால் தாலி கட்ட வைப்பாய்,
கட்டிய தாலி சாட்டியாய் கழுதையைவிட அதிக பொதியை சுமக்க வைப்பாய் மனதாலும், உடலாலும்.
அட மனமே! அந்த பொய்மையை விலகிடு,
அடி பொய்மையே! போய்விடு.
நரகத்தின் நுழைவாயிலே!
உன்னை சொர்க்கமென்றவன் மகா அயோக்கியனடி.
வேண்டாம் நீ,
என் முன்னால் நிற்காதே,
போய்விடு,
மனம் கொல்லும் பொய்மையே! உன் மானம் இழக்காமல் போய்விடு.
என்னை கடித்த எறும்பைக் கூட கொல்லக் கூடாது என்றெண்ணிய என் மனதை மிருகமாய் மாற்றி பொய்மையே! இங்கிருந்து ஓடிடு.
உன் வேசத்தை அறிந்தேன்.
நேசமாய் இருப்பதாய் நடிக்காதே.
மதுவால் விழுந்தாலும் மாதுவால் விழுந்தாலும் மாமிசம் உண்டு மாமிசம் பின்னே சென்று மடையனாய் மரணிப்பதே சுகமென்று தோன்றும்.
ஆனால் அது தான் மாயை.
நம்மை வீழ்த்த நாமே உருவாக்கிய பொய்மையான மீளாப் போதை.
கண்ணிமை கண்டால் மயக்கும்.
ஆனால் மயங்காதே,
பொய்மை விட்டே விலகிடு.
எல்லாத் துன்பமும் மறைந்திடும்.