காக்காய்ப்பிடித்தல்
என் வீட்டு சமையலறை ஜன்னலுக்கு பின்னே
ஒரு முதிர்ந்த வேப்ப மரம் ,,
அதன் கிளைகளில் சில காகங்கள் கூட்டு குடியிருப்பு ,
நாம் அன்றாடம் சமைத்த உணவை இறைவனுக்கு
படைத்து அதன் பின்னர் நாம் உண்ணும் முன்
காக்கைக்கு ஒரு கவளம் அளித்து பின்
உண்ணுதல் என்று பழக்க படுத்திக்கொள்ள வேண்டும்
என்று என் அம்மா சொல்லிய வாக்கிற்கு தப்பாமல்
தினமும் நான் சாதத்தில் தயிர் ஊற்றி பிசைந்த
கவளத்தை காக்கைக்கு உண்ண ஜன்னலின் பின்னே
வைப்பது வழக்கம் ................ஒரு நாள் தவறினாலும்
காக்கை ஜன்னலுக்குப் பின்னே வந்தமரும்
காக்கா காக்க என்று இரையும் , யாரும் வரவில்லை என்றால்
ஜன்னல் கண்ணாடியைத் தன் அலகால் கொத்தி கொத்தி
கூப்பிடும் புத்திசாலி காகம்.........................
'இது தான் காக்காப்பிடித்தலா ................?
தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதும்
இதுதானா ?
இதை மனிதர் நாம் ஏன் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ இன்னும்..
!