ஆறாம் அறிவு என்பது

சாதி மதத்திற்கு
இரையாகும் மனிதா...

உன் இனத்தை
நீயே அழிப்பதுதான் சரியா?

சாதிகள் இல்லையடி பாப்பா
என்பது வெறும் புத்தகத்தில் மட்டும் தானா?

நடைமுறைக்கு உதவாத
கல்வி மனிதனுக்கு வேண்டாம்!

நிதிக்காக நீதியை விற்கும்
நீதிமன்றம் மீது நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம்தான்

திருடன் ஒருவன்
காவல்காப்பான் என்பது
ஊரை ஏமாற்றுவது

ஆறாம் அறிவு என்பது
மனிதனுக்கு பயன்படாது எனில்
அஃறிணையாய் இருப்பதே மேல்!

எழுதியவர் : கிச்சாபாரதி (5-May-19, 11:56 am)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : aaram arivu enbathu
பார்வை : 157

மேலே