வாழ்வு முடிந்தால்
ஆயிரத்தில் ஒன்றாக இருந்தால் கூட
அழகேதான் மரத்திலுள்ள பச்சை இலைகள்,
ஆயுளது முடிந்தவைதான் பழுத்து வீழ்ந்தே
அனல்வெயிலில் காய்ந்தேதான் சருகாய் மாறும்,
ஓயுதலிலாக் காற்றடித்து மண்ணை விட்டு
ஒன்றதிலே பறந்துசென்று கோபுர மடையினும்
மாயமதாய் மதிப்பேதும் வருவ தில்லை
மாண்டுவிட்ட சருகேதான், வாழ்க்கை இதுவே...!